AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Dulquer Salmaan: சவாலான கதாபாத்திரங்கள் தேர்வு .. எதிர்மறை விமர்சனங்கள் குறித்து வெளிப்படையாக பேசிய துல்கர் சல்மான்!

Dulquer Salmaan About Negative Criticism: தென்னிந்திய திரையுலகில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் துல்கர் சல்மான். இவரின் நடிப்பில் தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம்தான் ஆகாசம்லோ ஒக்க தாரா. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய துல்கர் சல்மான், நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து தனது வெளிப்படையான கருத்தை தெரிவித்துள்ளார்.

Dulquer Salmaan: சவாலான கதாபாத்திரங்கள் தேர்வு .. எதிர்மறை விமர்சனங்கள் குறித்து வெளிப்படையாக பேசிய துல்கர் சல்மான்!
துல்கர் சல்மான்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 19 Nov 2026 08:31 AM IST

மலையாள திரையுலகின் மூலம் சினிமாவில் கதாநாயகனாக ரசிகர்களால் அறியப்பட்டவர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan). இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி ஹீரோவாக படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகியுள்ளது. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம் ஐஆம் கேம் (Im Game). மலையாள மொழியில் வெளியான இந்த திரைப்படமானது எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த படத்திற்கு பிறகு 2026ல் துல்கரின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக காத்திருக்கும் படம்தான் ஆகாசம்லோ ஒக்க தாரா (Aakasamlo Oka Tara). தெலுங்கு இயக்குநர் பவன் சடினேனி (Director Pavan Sadineni) இயக்க, மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. தனது மனைவியின் கனவிற்காக போராடும் நாயகனாக இதில் நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ளார்.

இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதியில் பிரம்மாண்டமாக வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் துல்கர் சல்மான், தனக்கு வரும் நெகடிவ் விமர்சனங்கள் பற்றிய தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆக்‌ஷனுக்கு ரெடியா… சூர்யாவின் 49-வது படத்தின் இயக்குநர் இவரா? வைரலாகும் தகவல்

தனக்குவரும் எதிர்மறை விமர்சனங்கள் குறித்து மனம்திறந்த துல்கர் சல்மான்:

அந்த நிகழ்ச்சியில் பேசிய துல்கர் சல்மான் அதில், “காலம் போக போக எதிர்மறை விமர்சனங்கள் என்னை பாதிப்பது குறித்துவிட்டது என் கூறலாம். என்னால் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிக்கமுடியாது என நினைத்தால், அந்த கதாபாத்திரத்தையே செய்யவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்துவிட்டது.

இதையும் படிங்க: ஹாய் சாதிகா… கேள்விகளால் சாதிகாவை மிரளவைத்த லக்ஷ்மி பிரியா – வைரலாகும் ப்ரோமோ!

என்னை பயமுறுத்தும் மற்றும் சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்க இதுபோன்ற விமர்சனங்களும் ஒரு காரணம். இதன் மூலமாக என்னை ஒரு நடிகராக மென்மேலும் வளர்த்துக்கொள்ள முடிகிறது” என அதில் அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

ஆகாசம்லோ ஒக்க தாரா திரைப்படம் குறித்து நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த ஆகாசம்லோ ஒக்க தாரா படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வீரவள்ளி என்ற புது நடிகை நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடிகை ஸ்ருதிஹாசனும் நடித்துள்ளார். இப்படம் காதல் மற்றும் விண்வெளி போன்ற வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாம். இப்படம் 2026 நவம்பர் 20ம் தேதியில் வெளியாகிறது. அதே தேதியில்தான் துல்கர் சல்மானின் தந்தை மம்முட்டி நடித்துள்ள ஓ.எம் திரைப்படம் தமிழில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us