AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஹாய் சாதிகா… கேள்விகளால் சாதிகாவை மிரளவைத்த லக்ஷ்மி பிரியா – வைரலாகும் ப்ரோமோ!

Bigg Boss 10 Promo: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது சிறப்பாக நடைபெற்றுவருகிறது. 11வது வாரத்தில் இருக்கும் இந்த நிகழ்ச்சியில், இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்றுவருகிறது. அதில் கடவுள் பாதி மிருகம் பாதி என்ற டாஸ்கில், சாதிகாவிடம் சரமாரியாக கேள்விகளை கேட்ட லக்ஷ்மி பிரியா குறித்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஹாய் சாதிகா… கேள்விகளால் சாதிகாவை மிரளவைத்த லக்ஷ்மி பிரியா – வைரலாகும் ப்ரோமோ!
சாதிகா மற்றும் லக்ஷ்மி பிரியாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 18 Nov 2026 16:10 PM IST

நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்றுதான் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியானது ஆரம்பமாகி 10 வாரங்களை கடந்து, தற்போது 11வது வாரத்தில் அடியெடுத்துவைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் தற்போது மொத்தமே 10 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். கடந்த இரு வர்ணங்களிலும் டபுள் எவிக்ஷன் நடைபெற்றிருந்த நிலையில், மொத்தமாக 2 வாரத்தில் 4 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். தற்போது பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது 11வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், இந்த வராம முழுக்க டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்குக்கான வாரமாக (Ticket to Finale Week task) அமைந்துள்ளது. இந்த டாஸ்கில் எந்த போட்டியாளர் வெற்றிபெறுகிறாரோ, அவர் நேரடியாக டிக்கெட் டூ பினாலே பாஸை வெல்வார். அந்த விதத்தில் இந்த வாரம் முழுக்க இந்த டாஸ்க் தீவிரமாக நடக்கும் நிலையில், அதில் இன்று (18/11/2026) “கடவுள் பாதி மிருகம் பாதி” என்ற டாஸ்க் நடந்துள்ளது.

இதில் அரியணையில் அமர்ந்திருக்கும் போட்டியாளர்களை கோபப்படுத்தும் வகையில், அவர்களை சரமாரியாக எந்த போட்டியாளர்கள் வேண்டுமானாலும் கேள்விகேட்கலாம் என்ற நிலையில், சாதிகாவிடம் லக்ஷ்மி பிரியா கேட்ட கேள்வி தொடர்பா ப்ரோமோ வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: பிக்பாஸில் டிடிஎஃப் வாசனுக்கு நேரடியாக சவால்விட்ட ஜேசன் – வைரலாகும் வீடியோ!

சாதிகாவிடம் சரமாரியாக கேள்விகளால் சூறையாடிய லக்ஷ்மி பிரியா:

இந்த ப்ரோமோவில், லக்ஷ்மி பிரியா, சாதிகாவிடம் தனது வன்மம் மற்றும் தனது கேள்விகளை நேரடியாகவே அவரிடம் கேட்டுள்ளார். அதில் லக்ஷ்மி பிரியா, “ஹாய் சாதிகா, 10 போட்டியாளர்களிடம் உனக்கு ஏன் கம்போர்ட்சோன் தேவைப்படுகிறது. உன்னால தனியாக விளையாட முடியாதா? பயமா இருக்குதா?” என கேட்டிருந்தார். சாதிகா உடனே, “எனக்கு கம்போர்ட்சோன் தேவ படல அது தானாகவே அமைந்தது” என கூறினார். உடனே லக்ஷ்மி பிரியா, “உன்ன சுத்தி ஒரு கூட்டத்தை உட்கார வைத்துவிட்டு வந்து பேசு என்றால் எப்படி வந்து பேசமுடியும் டி. உன்ன ஃப்ரெண்டாக பார்த்து ரொம்ப நாளாச்சு” என கூறியிருந்தார்.

இதையும் படிங்க: நயன்தாராவின் பர்த்டே.. மூக்குத்தி அம்மன் 2 பட BTS வீடியோவை பகிர்ந்த படக்குழு!

இதன் பிறகு ஜேசன், முகேஷ் மற்றும் சாதிகா மூவரும் பேர் ரூமில் இருந்து ஒன்றாக பேசும்போது, ஜேசன் அவர்களிடம், “லக்ஷ்மி பிரியா கேட்ட ஒவ்வொரு கேள்வியும் நாக்கை புடுங்குற மாதிரி இருந்துச்சி, இருக்குற வன்மத்தை எல்லாம் கக்கிடுச்சி” என அதில் அவர் கூறியிருந்தார். இதில் சாதிகா கண்கலங்கியபடி பேசியவாறு இந்த ப்ரோமோ உள்ளது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 73வது நாளின் 3வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

இந்த வாரம் முழுக்கவே டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்குக்கான போட்டிகள் நடப்பதாக தெரிகிறது. அந்த விதத்தில் இந்த வாரத்தில் எந்த போட்டியாளர் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கை வெல்கிறார் என தெரியவரும். மேலும் இந்த வாரத்திலும் எவிக்ஷன் இருக்கும் நிலையில், ப்ரித்வி அல்லது முகேஷ் இருவரில் ஒருவர் வெளியேற வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.

Follow Us