எந்த தைரியத்துல என்ன வில்லனா நடிக்க சொல்ற? மம்முட்டி குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த தயாரிப்பாளர் தனஞ்செயன்!
Producer Dhananjayan talks about Mammootty | தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் தனஞ்செயன். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர் மம்முட்டி உடன் நடந்த சுவாரஸ்யமான உரையாடல் ஒன்றை அவர் வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன் (G. Dhananjayan). இவரது தயாரிப்பில் தமிழ் மொழியில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது தயாரிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்தமான படங்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களின் பல்ஸ் புரிந்து அவர்களுக்கு பிடித்தமான படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களில் ஒருவராக உள்ளார் தயாரிப்பாளர் தனஞ்செயன். இவரது தயாரிப்பில் தற்போது உருவாகும் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருவது போல அவ்வபோது அவரது பேட்டிகளும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர் மம்முட்டி எவ்வாறு கதை தேர்வு செய்வார், ஒரு படத்தில் நடிக்கும் முன்பு அவர் அதனை எப்படி எல்லாம் அனுகுவார் என்பதையும் அவருடன் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்தும் தயாரிப்பாளர் தனஞ்செயன் வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




மம்முட்டி குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த தயாரிப்பாளர் தனஞ்செயன்:
அதன்படி தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, ஒரு கதாபாத்திரத்திற்காக நான் மம்மூட்டியிடம் அணுகியபோது, அவரிடமிருந்து ஒரு காட்டமான பதிலைப் பெற்றேன். அது ஒரு வலிமையான நாயகனையும், வலிமையான வில்லனையும் கொண்ட, இரு கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட படம். நான் அவரை அழைத்து அந்தத் திட்டத்தைப் பற்றிக் கூறினேன். அவர் கதையைக் கேட்க விரும்பினார், மேலும், “சரி, நான் நடிக்க வேண்டும் என்கிறாயே… இதில் நாயகன் யார்?” என்று கேட்டார்.
நான் அந்த நாயகனின் பெயரைக் குறிப்பிட்டேன். அவர் அந்த கதாபாத்திரம் குறித்துக் கேட்டபோது, அவர் வில்லனாக நடிக்க வேண்டும் என்று கூறினேன். அதற்கு அவர், “அந்த நாயகனை வில்லனாக நடிக்கச் சொல், நான் நாயகனாக நடிக்கிறேன். அவர் அதற்குத் தயார்தானா?” என்று உடனடியாகக் கேட்டார்.
பிறகு அவர், “எந்தத் துணிச்சலில் என்னை வில்லனாக நடிக்கச் சொல்கிறாய்?” என்று கேட்டார். “நான் பல படங்களில் நாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறேன். ஒருவேளை நான் வில்லனாக நடிக்க வேண்டும் என்றால், அதே கதையில் நான் நாயகனாகவே நடித்திருக்கலாமே!”
அவர் தனது கொள்கைகளில் உறுதியாக இருக்கும் ஒரு வலிமையான மனிதர். கலைக்காகவும், கதாபாத்திரத்தின் மீதான ஆர்வத்திற்காகவும் மட்டுமே நடிக்கும், எவ்வித சமரசமும் செய்துகொள்ளாதவர். அவரது ஆளுமையும் அந்தஸ்தும் ஒருபோதும் குறையாது. ஒரு கதாபாத்திரம் அவரது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே அவர் அதில் நடிப்பார். ஓ.எம் திரைப்படத்திலும் அவர் அப்படித்தான் நடித்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
I approached #Mammootty for a character and got a great dose from him. It was a 2-character-based film with a powerful hero and a powerful villain. I called him and told him about the project. He wanted to hear the story and asked, “Seri Nee Nadikanum Solra Hero Yaaru?” (Okay, you want me to act, who’s the hero?)
Then I mentioned the hero’s name. He asked about the role, and I told him he was playing the antagonist. He immediately asked the hero to play the villain, saying he would act as the hero, and asked if the hero was ready.
He then said, “Endha Dhaiyrathala Enna Villain Ah Nadika Solra?” (With what confidence are you asking me to play a villain character?) 😂
“I am acting as a hero in so many films. If I have to act as a villain, the same story would suit me as a hero.”
He is a strong man who stands by his principles, a no-nonsense person who acts purely for the art and his interest in the character. His character and stature will never be lowered. The character must live up to expectations; only then will he act. That’s how he should have acted in #Om.
— Dhananjayan https://t.co/1sFBQ95gdb— Movies Singapore (@MoviesSingapore) November 18, 2026
Also Read… ரவி மோகனின் கராத்தே பாபு படத்தின் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்