AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நடிகர் சூரியின் 7-வது படத்தின் தற்போதைய நிலை என்ன? அப்டேட் இதோ

Actor Soori 7 Movie | தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. இவரது நடிப்பில் தமிழ் மொழியில் அடுத்தடுத்தப் படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக தற்போது அவரது நடிப்பில் வெளியாகும் படம் தொடர்பான அப்டேட்டை தற்போது பார்க்கலாம்.

நடிகர் சூரியின் 7-வது படத்தின் தற்போதைய நிலை என்ன? அப்டேட் இதோ
சூரி 7 படக்குழுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Nov 2026 11:48 AM IST

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தற்போது தொடர்ந்து படங்களில் நாயகனாக பல ஹிட் படங்களில் நடித்து நடிகர் சூரி (Actor Soori) ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறார். மேலும் நடிகர் சூரி நாயகனாக நடித்து தமிழ் மொழியில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் நடிகர் சூரி காமெடி கதாப்பாதிரத்தை ஏற்று நடிக்கும் போதே அந்தப் படம் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் அவரது நடிப்பில் உருவான காமெடி காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் சூரி நாயகனாக நடிக்கத் தொடங்கினார். இவர் நாயகனாக நடித்து இதுவரை தமிழ் மொழியில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

தொடர்ந்து இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கி இதுவரை 6 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அந்த 6 படங்களுமே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிப் படங்களாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இறுதியாக வெளியான மண்டாட்டி என்ற படமும் மாபெரும் வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சூரியின் 7-வது படத்தின் தற்போதைய நிலை என்ன?

தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹிட் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களின் பட்டியளில் இடம் பிடித்துள்ளார் நடிகர் சூரி. இவரது நடிப்பில் அடுத்ததாக 7-வது படம் பூஜையுடன் தொடங்கி தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு இடைவேளையின்றித் தொடர்ந்து நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இடையில் 5 முதல் 6 நாட்கள் மட்டுமே சிறிய இடைவெளி இருக்கும்.

இதில் சூரி நகர்ப்புறத்தைச் சேர்ந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார், ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். 2015-ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தை, ரவிக்குமார் தனது பிரம்மாண்டமான காட்சிகளால் படமாக்குகிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

Also Read… அரசன் படத்திலிருந்து விலகிய அனிருத்.. இணைந்த புது இசையமைப்பாளர் யார் தெரியுமா?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… நோ பொங்கல் ரிலீஸ்… இந்தியன் 3 படம் குறித்து வெளியான அப்டேட்!

Follow Us