வாகன ஓட்டிகளே உஷார்! இன்ஸுரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் பைன்.. முக்கிய அறிவிப்பு!
Fine Imposed Uninsured Vehicles : இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் இன்ஸுரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .
காலாவதியான அல்லது காப்பீடு வருத்தப்படாத வாகனங்கள் சுங்க சாவடியை கடந்து செல்லும்போது என்ஹெச்ஏஐ. அமைப்பு அதனை கண்டறிந்து அபராதி விதிக்கும் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காப்பீட்டு விதிகளை கடுமையாக அமல்படுத்தி, சாலைகளை பாதுகாப்பானதாக மாற்றும் வகையில், காலாவதியான 3- ஆம் தரப்புக் காப்பீடு கொண்ட வாகனங்களை பிடிப்பதற்காக என்.ஹெச்.ஏ.ஐ. முண்ட்கா சுங்கச்சாவடியில் ஒரு முன்னோட்ட திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம், ஒரு வாகனம் காப்பீடு இல்லாமல் சுங்க சாவடியை கடந்து சென்றால் தானியங்கி அமைப்பு அதனை கண்டுபிடித்து, சில நிமிடங்களில் உரிமையாளரின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு செய்தி அனுப்பும். இதில், காப்பீட்டுக் கொள்கை உடனடியாக புதுப்பிக்குமாறு வலியுறுத்தப்படுவதோடு, மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், கடுமையான அபராதங்கள் விதிக்கப்படலாம் என்று எச்சரிக்கைப்பட்டிருக்கும்.
ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வாய்ப்பு
மோட்டார் வாகன சட்டத்தின்படி, செல்லுபடியாகும் காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டுவது சட்டத்துக்கு புறம்பானதாகும். முதல் முறை ரூ.2000 வரையிலும், 2- ஆம் முறை ரூ.10 ஆயிரம் வரையிலும் அபராதம் விதிக்கப்படலாம். மேலும், நீதிமன்ற வழக்கும் வாகனமும் பறிமுதல் செய்யப்படலாம். சாலையில் உள்ள ஒவ்வொரு வாகனமும் கட்டாயம் 3- ஆம் தரப்பு காப்பீட்டை எடுத்திருக்க வேண்டும் என்பதே என்.ஹெச்.ஏ.ஐ.-யின் இந்த புதிய முயற்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் நிவாரணம், இழப்பீடு கிடைக்கும்.
மேலும் படிக்க: பள்ளத்தில் பாய்ந்த கார்- பேருந்து.. 12 பேரை பலி கொண்ட கொடூர விபத்து.. உத்தரகாண்டில் பெரும் சோகம்!
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை
இந்த முன்னோட்ட திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளதால், வரும் காலங்களில் இந்த திட்டம் நாடு முழுவதும் உள்ள மற்ற தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் சுங்கச்சாவடிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், நெடுஞ்சாலைகளுக்கு அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பெரும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு உள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆக்கிரமிப்புகள் மற்றும் அனுமதி இல்லாத வாகன நிறுத்தம் மீதான தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. இதன் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் செயல்படும் சட்டவிரோத தாபாக்கள் மற்றும் உணவகங்கள் விரைவில் அகற்றப்பட வாய்ப்பு உள்ளது.
சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை
மேலும், சாலை பாதுகாப்பை மேம்படுத்துவது, சீரான போக்குவரத்தை உறுதி செய்வது, ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே நெடுஞ்சாலை பகுதிகளில் லாரிகள் நிறுத்தப்படுவது தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை நோக்கமாகக் கொண்டுள்ளது. சாலையோர தடைகளால் அதிகரித்து வரும் விபத்துகள் குறித்த கவலைகளை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட வாகன நிறுத்தும் இடங்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்தும் இடங்களை தவிர தேசிய நெடுஞ்சாலைகளில் லாரிகள் நிறுத்துவதற்கு எதிராக கடும் நடவடிக்கையை தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
மேலும் படிக்க: நாங்கள் நண்பர்கள்…. – முதல்வர் விஜய்யுடன் பேசியது குறித்து கர்நாடகா முதல்வர் விளக்கம்