AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

புதிய ஈ காமர்ஸ் விதிகளை அறிமுகம் செய்யும் மத்திய அரசு.. ஜனவரி 1 முதல் அமல்!

Central Government New E-commerce Policy | இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இ காமர்ஸ் தளங்களில் ஷாப்பிங் செய்கின்றனர். இந்த நிலையில், அவற்றில் தள்ளுபடி மற்றும் சலுகை என்ற பெயர்களில் நடைபெறும் மோசடிகளை தடுக்க முக்கிய சில விதிகளை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது.

புதிய ஈ காமர்ஸ் விதிகளை அறிமுகம் செய்யும் மத்திய அரசு.. ஜனவரி 1 முதல் அமல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 18 Nov 2026 12:00 PM IST

பல கடைகள் ஏறிச் சென்று, பொருட்களின் தரத்தை சோதனை செய்து வாங்கும் பழக்கம் பெருமளவு குறைந்துள்ளது. காரணம், பெரும்பாலான பொதுமக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கையே (Online Shopping) விரும்புகின்றனர். கடைகளுக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துக்கொண்டே அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) ஆகிய தங்களில் பொருட்களை வாங்குகின்றனர். பெரும்பாலான பொதுமக்கள் இந்த ஈ காமர்ஸ் தளங்கள் மூலம் ஷாப்பிங் செய்யும் நிலையில், மத்திய அரசு (Central Government) புதிய ஈ காமர்ஸ் விதிகளை (New e Commerce Rules) ஜனவரி 1 முதல் அறிமுகம் செய்ய உள்ளது.

புதிய ஈ காமர்ஸ் விதிகளை அறிமுகம் செய்யும் மத்திய அரசு

பெரும்பாலான ஈ காமர்ஸ் தளங்கள் வேண்டுமென்றே பொருட்களின் விலைகளை உயர்த்தி, அதன் பிறகு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் மூலல் விலையை குறைத்து விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இத்தகைய சிக்கல்கள் உள்ள நிலையில், ஆன்லைன் ஷாப்பிங் முறைகளை மாற்றியமைக்க மத்திய அரசு புதிய ஈ காமர்ஸ் விதிகளை அமலுக்கு கொண்டுவர உள்ளது. இந்த விதிகள் ஜனவரி 01, 2026 முதல் அமலுக்கு வரும் என்று அரசு கூறியுள்ளது.

இதையும் படிங்க : ஓராண்டுக்குப் பிறகு ரூ.1 லட்சத்துக்கு கீழ் குறைந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

புதிய ஈ காமர்ஸ் விதிகள் கூறுவது என்ன?

இந்த புதிய விதிகளின் மூலம், ஈ காமர்ஸ் தளங்களில் இனி எந்த ஒரு பொருட்களுக்கும் தள்ளுபடியை அறிவிக்கும்போது, அந்த பொருட்களுக்கான முந்தைய விலையையும் சேர்த்து குறிப்பிட வேண்டும் என கூறப்படுகிறது. அதாவது, தள்ளுபடி அறிவிக்கும் போது அந்த பொருளின் கடந்த 30 நாட்களில் இருந்த குறைந்த விலையை குறிப்பிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஆன்லைன் மூலம் பிஎஃப் இருப்பை தெரிந்துக்கொள்ளலாம்.. இந்த சிம்பிள் ஸ்டெப்ஸ் போதும்!

இந்த அம்சத்திற்கு தடை

Search Algorithms மற்றும் பரிந்துரை அமைப்புகள் சில குறிப்பிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகள் மற்றும் அதிக லாபம் தரும் பொருட்களுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து வாடிக்கையாளர்களை திசை திருப்புவதாக கூறுகின்றனர். எனவே, தேடல் முடிவுகளை நிறுவனங்கள் தங்களுக்கு சாதமாக மாற்றியமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளின் பெயர்களில் நடைபெறும் மோசடிகளை தடுக்க இந்த முக்கிய நடவடிக்கையை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.

Follow Us