வேலைக்கு செல்லாமலே மாதம் ரூ.5,500 சம்பளம் பெறலாம்.. இந்த அஞ்சலக திட்டம் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!
Post Office Investment for Rs. 5,500 Per Month | அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதால் மாதாந்திர வருமான திட்டம் ஆகும். அந்த திட்டத்தில் முதலீடு செய்து சிறப்பு பலன்களை பெறுவது எப்படி என பார்க்கலாம்.
நிதி பாதுகாப்பை பெற வேண்டும் என்றால் சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) மிகவும் அவசியம் ஆகும். இதற்காக வங்கிகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. வங்கிகள் செயல்படுத்தும் திட்டங்களில் சில ஆபத்துகள் உள்ளன. ஆனால், அஞ்சலங்கள் மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் பாதுகாப்பு மிகுந்தவையாக உள்ளன. இதனால், பொதுமக்கள் பலரும் அஞ்சலக சேமிப்பு திட்டங்களை தேர்வு செய்கின்றனர். அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம் (MIS – Monthly Income Scheme). இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில், அஞ்சல மாதாந்திர வருமான திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.5,500 வட்டி பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மாதாந்திர வருமான திட்டம் – ரூ.5,500 வட்டி பெறுவது எப்படி?
அஞ்சலகங்கள் மூலம் அரசு செயல்படுத்தும் அசத்தலான திட்டம் தான் மாதாந்திர வருமான திட்டம். இந்த திட்டத்திற்கு அரசு ஆண்டுக்கு 7.4 சதவீதம் வட்டி வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஒரு தனிநபர் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த மாதாந்திர வருமான திட்டத்தில் ஒருவர் ரூ.9 லட்சம் முதலீடு செய்யும் பட்சத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.5,500 வட்டி வருமானம் பெற முடியும். இந்த வட்டியை ஒவ்வொரு மாதமும் 5 ஆண்டுகளுக்கு வட்டியாக பெற முடியும்.
இதையும் படிங்க : ஓராண்டுக்குப் பிறகு ரூ.1 லட்சத்துக்கு கீழ் குறைந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?




திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
இந்த திட்டங்கள் மொத்தம் ஐந்து ஆண்டுகள் கால அளவீட்டை கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1,000 முதலீடு செய்ய முடியும். அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதுவே, நீங்கள் கூட்டு கணக்கு தொடங்கி முதலீடு செய்கிறீர்கள் என்றால் உங்களால் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
இதையும் படிங்க : ஆன்லைன் மூலம் பிஎஃப் இருப்பை தெரிந்துக்கொள்ளலாம்.. இந்த சிம்பிள் ஸ்டெப்ஸ் போதும்!
எம்ஐஎஸ் திட்டத்தில் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
எம்ஐஎஸ் திட்டத்தில் ஒருவர் ரூ.9 லட்சம் முதலீடு செய்கிறார் என்றால், அவருக்கு ஆண்டுக்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படும். அதன்படி, ஒரு ஆண்டுக்கு ரூ.66,600 வட்டியாக மட்டும் கிடைக்கும். இதனை மாத அடிப்படையில் பிரித்தால் ரூ.5,550 கிடைக்கும். 5 ஆண்டுகள் என கணக்கிட்டு பார்த்தால் 60 மாதங்களுக்கு இவ்வாறு மாதம் மாதம் ரூ.5,550 கிடைக்கும். அதன்படி கணக்கிட்டு பார்த்தால் ஐந்து ஆண்டுகளில் மட்டும் வட்டியாகவே ரூ.3,33,000 கிடைக்கும்.