AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தனிநபர் கடன் வாங்கி அதிக வட்டி கட்டாதீங்க.. இத தெரிஞ்சுக்கோங்க.. பல ஆயிரங்களை சேமிக்கலாம்!

Home Loan Top-Up To Reduce Interest Rate | பலரும் தங்களுக்கு நிதி தேவை ஏற்படும்போது வங்கிகளில் தனிநபர் கடன் வாங்குகின்றனர். இந்த நிலையில், தனிநபர் கடனை வாங்குவதை விடவும், இந்த முறையில் கடன் பெற்றால் பல ஆயிரங்களை சேமிக்க முடியும்.

தனிநபர் கடன் வாங்கி அதிக வட்டி கட்டாதீங்க.. இத தெரிஞ்சுக்கோங்க.. பல ஆயிரங்களை சேமிக்கலாம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 14 Nov 2026 00:56 AM IST

மனிதர்களுக்கு எப்போதுமே பண தேவை இருந்துக்கொண்டே தான் இருக்கும். அதற்காக தான் பலரும் வேலைக்கு சென்றோ அல்லது தொழில் செய்தோ சம்பாதிக்கின்றனர். அதையும் தாண்டி எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் பண தேவைகளை பூர்த்தி செய்ய பலரும் சேமிப்பு (Savings) அல்லது முதலீடு (Investment) செய்கின்றனர். ஆனால் சேமிப்பு அல்லது முதலீடு செய்யாத நபர்கள் தங்களுக்கு திடீர் பண தேவை ஏற்படும்போது கடன் வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். அவ்வாறு பண தேவை ஏற்படும்போது பலரும் தனிநபர் கடன்களை வாங்குகின்றனர். ஆனால், அதற்கு வேறு வழி உள்ளது. அதாவது, தனிநபர் கடன் வாங்காமால் பண தேவையை பூர்த்தி செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தனிநபர் கடனுக்கு பதில் இதனை செய்யலாம் : என்ன தெரியுமா?

பலரும் தங்களுக்கு பண தேவை ஏற்படும்போது தனிநபர் கடனை தேர்வு செய்கின்றனர். ஏற்கனவே கடன் இருந்தாலும், மேலும் தங்களது தேவைகளுக்காக கடனை பெறுகின்றனர். இந்த நிலையில், ஏற்கனவே கடன் உள்ள நபர் மேற்கொண்டு புதிய கடனை வாங்குவதற்கு பதிலாக ஏற்கனவே இருக்கும் கடனின் மீது டாப் அப் (Top Up) செய்துக்கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் பல ஆயிரம் ரூபாயை உங்களால் சேமிக்க முடியும்.

இதையும் படிங்க : பங்குச் சந்தையை நசுக்கிய பணவீக்கம்.. 7 நிமிடங்களில் 2.83 லட்சம் கோடி ரூபாயை இழந்த முதலீட்டாளர்கள்!

வீட்டுக் கடன் டாப் என்றால் என்ன?

வீட்டுக் கடன் டாப் அப் என்பது ஏற்கனவே நீங்கள் பெற்று இருக்கும் கடன் மீது மேலும் கடன் தொகையை பெறுவது ஆகும். இந்த முறையில், உங்களது சொத்து ஏற்கனவே பிணையமாக இருக்கும் பட்சத்தில், உங்களுக்கு புதியதாக பிணையம் எதுவும் தேவைப்படாது. ஆனால், தனிநபர் கடனுக்கு எந்தவித பிணையமும் தேவைப்படாது. ஆனால், அங்கு தான் ஒரு டிவிஸ்ட் உள்ளது. எந்த வித பிணையமும் இல்லாமல் வழங்கப்படுவதன் காரணமாக இந்த தனிநபர் கடனுக்கு அதிக வட்டி விதிக்கப்படும்.

இதையும் படிங்க : Gold Price: நகை வாங்க சரியான நேரம்..! கடகடவென சரியும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ. 960 குறைந்து விற்பனை

தனிநபர் கடனுக்கான வட்டி பொதுவாக 11 சதவீதம் முதல் 24 சதவீதமாக இருக்கும். இதுவே வீட்டுக் கடன் டாப் அப் எடுத்துக்கொண்டால் அதன் வட்டி விகிதம் 8.5 சதவீதம் முதல் 10 சதவீதமாக இருக்கும். இந்த சிறிய அளவிலான வட்டி விகித வித்தியாசம் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். எனவே, அடுத்த முறை நீங்கள் புதிய தனிநபர் கடனை வாங்குவதற்கு முன்னதாக இதனை யோசியுங்கள்.

Follow Us