AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold Price: நகை வாங்க சரியான நேரம்..! கடகடவென சரியும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ. 960 குறைந்து விற்பனை..

Chennai Gold Rate: சென்னையில் நவம்பர் 13ஆம் தேதி 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.12,695க்கும், ஒரு சவரன் ரூ.1,01,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தூய தங்கம் ஒரு கிராம் ரூ.13,849க்கும், ஒரு சவரன் ரூ.1,11,840க்கும் விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.195க்கும், ஒரு கிலோ ரூ.1,95,000 விற்பனை செய்யப்படுகிறது. 

Gold Price: நகை வாங்க சரியான நேரம்..! கடகடவென சரியும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ. 960 குறைந்து விற்பனை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 13 Nov 2026 10:19 AM IST

நவம்பர் 13, 2026: தங்கம் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருந்து வந்த நிலையில், நவம்பர் மாதத்தில் இருந்து அதிரடியாகக் குறைந்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்களுக்கு ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சரிவைச் சந்தித்து வருவதே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிவு

அமெரிக்காவில் எதிர்பார்த்ததைவிட பணவீக்கம் அதிகரித்திருப்பது தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், அமெரிக்க டாலரின் மதிப்பு வலுப்பெற்றிருப்பதும், அமெரிக்கப் பத்திரங்களின் வருவாய் அதிகரித்திருப்பதும் தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வத்தைக் குறைத்துள்ளன.

மேலும் படிக்க: “விலைவாசி உயர்வில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்!”.. மத்திய அரசு வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்!!

இதன் காரணமாக சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,000 டாலருக்குக் கீழே சரிந்தது. நவம்பர் 12ஆம் தேதி ஒரே நாளில் சர்வதேச தங்கம் விலை சுமார் 3 சதவீதம் வரை சரிந்து ஓராண்டுக்கும் மேலான குறைந்தபட்ச நிலையை எட்டியது. இருப்பினும், நவம்பர் 13ஆம் தேதி சரிவுக்குப் பிறகு முதலீட்டாளர்களின் வாங்கும் ஆர்வத்தால் தங்கம் விலை சுமார் 1 சதவீதம் மீண்டது.

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை

சென்னையில் நவம்பர் 13ஆம் தேதி மீண்டும் தங்கம் விலை குறைந்திருக்கிறது ஒரு கிராமுக்கு 120 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக ஒரு சவரன் தங்கம் விலை 960 ரூபாய் குறைந்துள்ளது. வெள்ளி விலையை பொருத்தவரையில்  இன்று மீண்டும் குறைந்து ஒரு கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து விற்பனை செய்யப்படுகிறது

மேலும் படிக்க: தங்கத்தை வாங்கி வைத்தால் தான் எதிர்காலத்தில் பிழைக்க முடியும்.. முக்கிய நிபுணர் அறிவுரை!

22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.12,695க்கும், ஒரு சவரன் ரூ.1,01,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தூய தங்கம் ஒரு கிராம் ரூ.13,849க்கும், ஒரு சவரன் ரூ.1,11,840க்கும் விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.195க்கும், ஒரு கிலோ ரூ.1,95,000 விற்பனை செய்யப்படுகிறது.

நகை வாங்குவோருக்கு நிம்மதி

தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவது திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், சர்வதேச சந்தையின் மாற்றங்கள், டாலர் மதிப்பு, அமெரிக்காவின் வட்டி விகித முடிவுகள் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து தங்கம் விலையில் மீண்டும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

 

 

Follow Us