AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold Price : மூன்று நாட்களில் ரூ.3,160 சரிந்த தங்கம் விலை.. கடும் சரிவுக்கு காரணம் என்ன?

Gold Crashed 3,160 Rupees In Just 3 Days | தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், வெறும் மூன்று நாட்களில் தங்கம் விலை ரூ.3,160 சரிந்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Nov 2026 13:23 PM IST
தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில்,  வெறும் 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.3,160 சரிவை சந்தித்துள்ளது. இதன் காரணமாக் தங்கம் ஒரு சவரன் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் செல்லுமா என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில், தங்கத்தின் தற்போதைய நிலவரம் குறித்து பார்க்கலாம். 

1 / 5
2026 ஆம் ஆண்டு தங்கத்திற்கு சிறந்தாத அமையவில்லை. காரணம், ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை உச்சத்தில் இருந்த நிலையில், அதன் பிறகு படிப்படியாக சரிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக ஆண்டின் இறுதியில் தங்கம் ஒரு கிராம் ரூ.20,000-க்கு மேல் செல்லும் என கூறப்பட்ட நிலையில், தொடர் சரிவை சந்தித்து வருகிறது.

2 / 5
உலக சந்தையில் தங்கம் விலை குறைந்ததே இந்தியாவில் தங்கம் விலை வீழ்ச்சியை சந்திக்க மிக முக்கிய காரணமாக உள்ளது. குறிப்பாக அமெரிக்க மத்திய வங்கி மேலும் வட்டி விகிதத்தை உயர்த்தலாம் என எதிர்ப்பார்க்கப்படுவதால் தங்கம் விலை மேலும் தொடர் சரிவை சந்தித்து வருகிறது.

3 / 5
குறிப்பாக கடந்த மூன்று நாட்களாக தொடர் சரிவை சந்தித்து வந்த தங்கம் வெறும் மூன்றே நாட்களில் ரூ.3,160 சரிந்துள்ளது. அதாவது, நவம்பர் 10, 2026 அன்று 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.13,210-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று ஒரு கிராம் ரூ.12,815-க்கும், ஒரு சவரன் ரூ.1,02,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

4 / 5
அதாவது, இந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் கிராமுக்கு ரூ.395 குறைந்துள்ள நிலையில், சவரனுக்கு ரூ.3,160 சரிந்துள்ளது. தங்கத்தின் தற்போதைய விலையை ஆண்டின் தொடக்கத்தில் இருந்ததுடன் ஒப்பிடும் பட்சத்தில் கடும் சரிவில் உள்ளது. இந்த நிலையில், அமெரிக்க மத்திய வங்கி மேலும் வட்டியை உயர்த்தும் பட்சத்தில் தங்கம் விலை மேலும் குறையும் சூழல் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

5 / 5
Follow Us