AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தங்கத்தை வாங்கி வைத்தால் தான் எதிர்காலத்தில் பிழைக்க முடியும்.. முக்கிய நிபுணர் அறிவுரை!

Gold Investment is Crucial for Future | சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி கடும் சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தான், பிரபல முதலீட்டு நிபுணர் ஜிம் ரோஜர்ஸ் தங்கத்தில் முதலீடு செய்வதுதான் எதிர்காலத்தை பாதுகாக்க உதவும் என கூறியுள்ளார்.

தங்கத்தை வாங்கி வைத்தால் தான் எதிர்காலத்தில் பிழைக்க முடியும்.. முக்கிய நிபுணர் அறிவுரை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 10 Nov 2026 14:13 PM IST

காலம் காலமாக தங்கத்தில் (Gold) முதலீடு செய்வது இந்தியர்கள் மத்தியில் வழக்கமாக உள்ளது. முன்பு இந்தியர்கள் மத்தியில் தங்கம் ஒரு ஆடம்பரமாக இருந்தது. ஆனால், தற்போது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. அதாவது, பணவீக்கம் உள்ளிட்ட சிக்கல்களை எதிர்த்து போராட உதவியாக தங்கம் உள்ளிட்ட முதலீடுகள் தான் உள்ளன. குறிப்பாக எதிர்காலத்தில் பண தேவை ஏற்பட்டாலும் கூட தங்கத்தை வைத்து ஈடு செய்துக்கொள்ள முடியும். இந்த நிலையில், தற்போது தங்கத்தில் முதலீடு செய்தால் தப்பிக்கலாம் இல்லையென்றால் எதிர்காலம் சிக்கலானதாக மாறிவிடும் என்று முதலீட்டு நிபுணர் ஜிம் ரோஜர்ஸ் கூறியுள்ளார். இந்த நிலையில், தங்கத்தில் முதலீடு செய்வது குறித்து அவர் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தங்கத்தை வாங்கி வைத்தால் தான் எதிர்காலத்தில் பிழைக்க முடியும்

உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. தங்கம் வரலாற்று உச்சத்தில் இருந்து சரிவை சந்தித்தாலும், தங்கத்தை வாங்கி வைப்பவர்கள் தான் எதிர்காலத்தில் பிழைக்க முடியும் என்று பிரபல முதலீட்டாளர் ஜிம் ரோஜர்ஸ் தெரிவித்துள்ளார். தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர் சரிவை சந்தித்து வரும் நிலையில், பிசினஸ் டுடேவில் அவர் அளித்த பேட்டியில் இந்த அறிவுரையை வழங்கியுள்ளது கவனத்தை பெற்றுள்ளது.

இதையும் படிங்க : 18K, 22K மற்றும் 24K.. இவை நான்கில் எது சிறந்தது.. எது உண்மையான தங்கம்!

முடிந்த அளவுக்கு தங்கத்தை வாங்கி வையுங்கள் : ஜிம் ரோஜர்ஸ்

முதலீட்டு நிறுவனங்களை நடத்தி வரும் ஜிம் ரோஜர்ஸ், ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவுக்கு தங்கத்தை வாங்கி பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தற்போதைய கால சூழலில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பணவீக்கத்தை எதிர்க்கொண்டு வருகின்றன. இத்தகைய சூழலில் பணவீக்கத்தை எதிர்த்து போராடவும், எதிர்காலத்தில் தங்கம் மற்றும் வெள்ளி தலைசிறந்த உலோகங்களாக இருக்கும் என்பதால் அனைவரும் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : சமோசா மூலம் உருவான சாம்ராஜ்யம்.. ரூ.200 கோடிக்கு அதிபதியான தம்பதி!

அழுத்தமாக வலியுறுத்தும் ஜிம் ரோஜர்ஸ்

இது குறித்து கூறியுள்ள ஜிம் ரோஜர்ஸ், நான் எப்போதும் கூறுவது ஒன்று தான். ஒவ்வொருவரும் தங்கத்தையும், வெள்ளியையும் வைத்திருக்க வேண்டும். அது தான் வரும் காலங்களில் அவர்களை காப்பாற்றும் என்று அவர் கூறியுள்ளார். ரோஜர்ஸ் கூறியுள்ளப்படி கடந்த காலங்களில் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் தற்போது நல்ல லாபத்தை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us