செக்கில் ஏன் “Only” என குறிப்பிடப்படுகிறது?.. அதற்கான உண்மையான அர்த்தம் இதுதான்!
Bank Cheque Safety | பணம் எடுக்க கொடுக்கும் செக்குகளில் தொகையை உள்ளிட்ட பிறகு அதன் உடன் சேர்த்து only என்ற வார்த்தையும் இணைக்கப்படும். இந்த நிலையில், அந்த only என்ற வார்த்தை எதற்கு பயன்படுத்தப்படுகிறது, அதன் அவசியம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வங்கியில் இருந்து பணம் எடுக்கவோ, அல்லது வேறு ஒருவருக்கு பணம் கொடுக்கவோ தற்போது பல வழிகள் உள்ளன. ஆனால், முன்பு ஒருவருக்கு வங்கி கணக்கில் இருந்து பணம் கொடுக்க அதிகமாக பயன்படுத்தப்பட்ட முறை தான் செக் (Cheque). அதாவது, இந்த செக் முறையில் யாருக்கு பணம் கொடுக்கிறோமோ அவருக்கு அந்த தொகையை குறிப்பிட்டு செக் எழுதி கொடுத்தால் போதும். அதனை அந்த நபர், வங்கியில் ஒப்படைத்து பணம் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு ஒருவருக்கு செக் எழுதி கொடுக்கும்போது Only என குறிப்பிட்ட எழுதி கொடுக்கப்படுகிறது. அதற்கு அர்த்தம் என்ன, அதனை குறிப்பிடுவதற்கான அவசியம் என்ன என்னது குறித்து விரிவாக பார்க்கலாம்.
செக்கில் ஏன் Only என குறிப்பிடப்படுகிறது?
பொதுவாக செக் எழுதும்போது அதில் எவ்வளவு தொகை என்பதை குறிப்பிட வேண்டும். செக் எழுதும்போது இரண்டு இடங்களில் தொகை குறிப்பிடப்படும். உதாரணமாக ரூ.10 ஆயிரத்துக்கு ஒருவருக்கு செக் கொடுக்கிறோம் என்றால் முதலில் எண்களில் Rs.10,000 என குறிப்பிட்டு பிறகு எழுத்துக்களில் Ten Thousand Only என எழுதுவர். இந்த இடத்தில் ஏன் only என குறிப்பிடுகின்றனர் என பலருக்கும் தெரியாது.




இதையும் படிங்க : தீபாவளிக்கு இலவச வேட்டி, சேலை.. யார் யாருக்கு கிடைக்கும்.. முழு விவரம் இதோ!
Only என குறிப்பிட இதுதான் காரணம்
அதாவது, செக் எழுதும்போது Ten Thousand மட்டும் என எழுதிவிட்டால் அதற்கு பிறகு வேறு ஏதேனும் தொகையை எழுத வாய்ப்பு உள்ளது. உதாரணமாக Ten Thousand and Nine Hundred என அதனை மாற்றம் செய்துக்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. இத்தகைய சிக்கல்களை தடுக்க தான் எந்த ஒரு தொகையை குறிப்பிட்டாலும் அந்த தொகைக்கு அருகில் only என குறிப்பிடப்படுகிறது.
எண்களின் எழுதும்போதும் சிக்கல் வரும்
இதே சிக்கல்கள் எண்களில் எழுதும்போதும் வரும். அதனை உறுதி செய்ய தான் எழுத்துக்களில் எழுதப்படுகிறது. அதாவது, ரூ.10,000 காசோலையில் கூடுதலாக ஒரு பூஜியத்தை சேர்க்கும் பட்சத்தில் அது ஒரு லட்சமாக மாறிவிடும். எனவே எவ்வளவு தொகை என்பதை உறுதி செய்ய எழுத்துக்களால் எழுதப்படுகிறது. அதிலும் எந்த வித சிக்கல்களும் வந்துவிட கூடாது என்பதற்காக தான் இந்த எழுத்துக்களில் only என குறிப்பிடப்படுகிறது.
இதையும் படிங்க : தீபாவளிக்கு புது கார் வாங்கப்போறீங்களா? இந்த 5 விஷயங்களை கவனிக்க மறக்காதீங்க!
எனவே அடுத்த முறை நீங்கள் செக் எழுதும்போதோ அல்லது எங்கேனும் தொகையை குறிப்பிடும்போதோ பாதுகாப்புக்காக இந்த only வார்த்தையை பயன்படுத்த மறந்துவிடாதீர்கள்.