இனி வாட்ஸ்அப் மூலமே PF பேலன்ஸ் தெரிந்துக்கொள்ளலாம்.. வந்தது அட்டகாசமான அம்சம்!
New EPFO WhatsApp Update | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பல்வேறு சிறப்பு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், இபிஎஃப்ஓ வாட்ஸ்அப்பில் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அந்த சிறப்பு அம்சம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பயனர்களின் வசதிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சம் அறிமுகம் (EPFO – Employee Provident Fund Organization) செய்ததுதான் இபிஎஃப்ஓ வாட்ஸ்அப் (EPFO – WhatsApp). இந்த வாட்ஸ்அப் மூலம் ஊழியர்கள் இபிஎஃப்ஓ சேவைகளை பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதில் ஒரு அட்டகாசமான அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இபிஎஃப்ஓ வாட்ஸ்அப் மூல்ம பிஎஃப் (PF – Provident Fund) இருப்பை தெரிந்துக்கொள்வதுதான் அது. இந்த நிலையில், இபிஎஃப்ஓ வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய அம்சம் என்ன, அதனை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இபிஎஃப்ஓ வாட்ஸ்அப்-ல் இனி பேலன்ஸ் பார்க்கலாம்
இபிஎஃப்ஓ பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அதாவது, இனி வாட்ஸ்அப் மூலமே ஊழியர்கள் தங்களது பிஎஃப் பேலன்ஸை செக் செய்துக்கொள்ள முடியும். மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்த புதிய வசதியை தொடங்கி வைத்துள்ளார்.
இதையும் படிங்க : Gold Price : நகை பிரியர்களுக்கு ஷாக்.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. நிலவரம் என்ன?




பிஎஃப் பேலன்ஸ் செக் செய்வது எப்படி?
- இபிஎஃப்ஓவின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணான 8796441800 என்ற எண்ணுக்கு Hello என மெசேஜ் அனுப்ப வேண்டும்.
- நீங்கள் குறுஞ்செய்தி அனுப்பிய பிறகு, உங்களது மொழியை தேர்வு செய்ய கூறி கேட்கும்.
- நீங்கள் மொழியை தேர்வு செய்த பிறகு, பேலன்ஸ், பாஸ்புக், கடைசி 5 பரிவர்த்தனைகள் என ஆப்ஷன்கள் காட்டும்.
- அவற்றில் உங்களுக்கு எது வேண்டுமோ அதனை நீங்கள் தேர்வு செய்துக்கொள்ளலாம்.
- பின்னர் நீங்கள் தேர்வு செய்த ஆப்ஷனில் கேட்கப்படும் விவரங்களை உள்ளிடும் பட்சத்தில் நீங்கள் தேடும் விவரங்களை வாட்ஸ்அப் மூலமாகவே தெரிந்துக்கொள்ள முடியும்.
இதையும் படிங்க : பராமரிப்பு கம்மி.. மைலேஜ் அதிகம்.. ரூ.6 லட்சம் பட்ஜெட்டுக்குள் சிறந்த 5 கார்கள் இவைதான்
இனி இணையதளத்திற்கு சென்று செக் செய்ய வேண்டாம்
முன்னதாக இந்த வாட்ஸ்அப் எண்ணின் சேவைகள் தொடர்பான விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை மட்டுமே பெற முடியும். பேலன்ஸ் செக் செய்ய வேண்டும் என்றால் இணையதளம் மூலமே செய்ய வேண்டும். ஆனால், தற்போது பேலன்ஸ் செக் செய்ய இணையதளத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வாட்ஸ்அப் எண் மூலமே மிக சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம்.