Gold Price: சென்னையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு!
Chennai Gold Rate: சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.12,800 என்ற அளவிலும், ஒரு சவரன் ரூ.1,02,400 என்ற அளவிலும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் 24 கேரட் தூய தங்கம் ரூ.13,964-க்கும், ஒரு சவரன் ரூ.1,11,712-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நவம்பர் 3, 2026: சென்னையில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த தங்கம் விலை, நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், நவம்பர் 3ஆம் தேதியான இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.25 உயர்ந்துள்ளதால், ஒரு சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்தது. அக்டோபர் 1ஆம் தேதி சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.13,680-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், மாத இறுதியில் ரூ.12,730 ஆகக் குறைந்தது. அதாவது, ஒரே மாதத்தில் ஒரு கிராமுக்கு சுமார் ரூ.950 வரை சரிவு ஏற்பட்டது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சரிவு, அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் பத்திர வருவாயில் ஏற்பட்ட மாற்றங்கள் உள்ளிட்டவை இந்த விலை வீழ்ச்சிக்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.
மேலும் படிக்க: தீபாவளிக்கு கார் வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் குறைந்த வட்டி?
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.12,800 என்ற அளவிலும், ஒரு சவரன் ரூ.1,02,400 என்ற அளவிலும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் 24 கேரட் தூய தங்கம் ரூ.13,964-க்கும், ஒரு சவரன் ரூ.1,11,712-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரையில், கடந்த சில நாட்களாகவே பெரிய மாற்றமின்றி தொடர்ந்து அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.200-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: கடந்த ஆண்டு சாதனையை முறியடித்த அக்டோபர் மாத ஜி.எஸ்.டி வசூல்.. தமிழகத்திற்கு மட்டும் ரூ.7,460 கோடி நிதி பகிர்வு!!
தங்கத்தில் முதலீடு செய்யலாமா?
தங்கம் விலை அக்டோபர் மாதத்தில் கணிசமாகக் குறைந்திருந்தாலும், நவம்பர் மாதத் தொடக்கத்தில் மீண்டும் உயர்வைக் கண்டுள்ளது. இதனால், விலை குறைந்தபோது தங்கம் வாங்கத் தவறியவர்கள் தற்போது முதலீடு செய்யலாமா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
பொதுவாக, நீண்டகால முதலீட்டில் தங்கம் ஒரு முக்கியமான சொத்தாகக் கருதப்படுகிறது. பணவீக்கம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல்களில் தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வம் அதிகரிப்பதும் வழக்கம். இருப்பினும், தங்கத்தின் விலை குறுகிய காலத்தில் கடுமையாக ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கக்கூடும் என்பதால், விலை தொடர்ந்து உயரும் என்ற எதிர்பார்ப்பில் ஒரே நேரத்தில் அதிக தொகையை முதலீடு செய்வது ஆபத்தானதாக இருக்கலாம்.