AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold Price : நகை பிரியர்களுக்கு ஷாக்.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. நிலவரம் என்ன?

Gold and Silver Price In Chennai Today | கடந்த மூன்று நாட்களாக தொடர் சரிவை சந்தித்து வந்த தங்கம், இன்று விலை உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : நகை பிரியர்களுக்கு ஷாக்.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. நிலவரம் என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 02 Nov 2026 11:19 AM IST

சென்னை, நவம்பர் 02 : கடந்த மூன்று நாட்களாக தொடர் சரிவை சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்து வந்த தங்கம் விலை (Gold Price), இன்று (நவம்பர் 02, 2026) மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது. அதாவது, தங்கம் கிராமுக்கு ரூ.45 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் (Silver Price) மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம் மற்றும் வெள்ளி

2026 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஆண்டின் தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த தங்கம், அதன் பிறகு தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்திக்க தொடங்கியது. அந்த வகையில் தான், தங்கம் தற்போது கடும் சரிவில் உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்களது வட்டி விகிதங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளது இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க : விடிந்ததும் இடியாய் இறங்கிய செய்தி.. வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு.. உணவக உரிமையாளர்கள் அதிர்ச்சி!

இன்றைய தங்கம், வெள்ளி விலை

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,775-க்கும், சவரனுக்கு ரூ.260 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,02, 200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.13,936-க்கும், ஒரு சவரன் ரூ.1,11,488-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.200-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : வெறும் 2 கூல் ட்ரிங்க்ஸ் மட்டும் தான் விற்பனை.. மாதம் ரூ.6 லட்சம் வருமானம்.. அசத்தும் அகமதாபாத் தம்பதி!

2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு கிராம் தங்கம் ரூ.20,000-த்தை தாண்டும் என கூறப்பட்டது. ஆனால், கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலக மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்துவது ஆகியவை தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி சரிவை சந்திக்க செய்துள்ளது. இனி வரும் காலங்களிலும் தங்கம் விலை மேலும் சரியும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us