AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முரசு புயல் அப்டேட்.. நவம்பர் மாதம் மழை எப்படி இருக்கும்? டெல்டா வெதர்மேன் விரிவான விளக்கம்

Cyclone Murasu : தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்தியா பரிந்துரைத்த "முரசு" என்ற தமிழ் பெயர் இப்புயலுக்கு சூட்டப்பட்டுள்ளது. இப்புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது.

முரசு புயல் அப்டேட்..  நவம்பர் மாதம் மழை எப்படி இருக்கும்? டெல்டா வெதர்மேன் விரிவான விளக்கம்
முரசு புயல்
C Murugadoss
C Murugadoss | Updated On: 02 Nov 2026 12:25 PM IST

டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் வழங்கிய விரிவான வானிலை அனுமானத்தின்படி,  முரசு புயல் ஒரு தீவிர புயலாகவோ, மிகத் தீவிர புயலாகவோ வலுவடையப் போவதில்லை. காற்று முறிவு மற்றும் வறண்ட காற்றின் ஊடுருவல் காரணமாக, கடற்கரையை நெருங்கும்போது வலுவிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.  இப்புயல் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வடகோடி தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மத்திய ஆந்திரா அல்லது வட ஆந்திராவை நோக்கி நகர வாய்ப்பில்லை. குறிப்பாக, சென்னையை ஒட்டிய வட தமிழக கடற்கரையோரப் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரையோரப் பகுதிகளை வந்தடையும். காற்று பாதிப்பை ஏற்படுத்தாமல் இது மழைப்பொழிவை தரக்கூடிய சலனமாக அமையும். இந்திய வானிலை மையம் 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என கணித்திருந்தாலும், அதற்கு முழுமையான வாய்ப்புகள் இல்லை.

மழைப்பொழிவு வாய்ப்புகள்

முரசு புயலின் காரணமாக, நவம்பர் 1 இரவு முதல் தமிழகத்தில் மழைப்பொழிவு தொடங்கும். சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழையாகத் தொடங்கி, நவம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இப்புயல் மிக அருகில் வந்து, கடற்கரையை நெருங்கும்போது வலுவிழக்கக்கூடும். அப்போது காற்று முறிவு ஏற்பட்டு புதிய மேகக்கூட்டங்கள் உருவாகி மிகக் கனமழையை ஏற்படுத்தலாம்.

வடகோடி மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் நவம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் பரவலாக மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கு ஆந்திர கடற்கரையோரப் பகுதிகளான காவாலி மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் மிகக் கனமழை முதல் அதி கனமழை வரையும் பதிவாக வாய்ப்புள்ளது.

விளக்கம்

Also Read: மலைப்பாதையில் கோர விபத்து.. 100 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த லாரி.

உள் மாவட்டங்கள் மற்றும் பிற பகுதிகளில் மழை

புயல் கடற்கரையை நெருங்கும் போது, அரபிக்கடலில் இருந்து ஈரப்பதமான காற்றை ஈர்ப்பதால், தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நவம்பர் 3 ஆம் தேதி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் போன்ற மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைப்பொழிவு பதிவாகும். காவிரி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் நவம்பர் 4 ஆம் தேதி முதல் இடி மின்னலுடன் கூடிய மழைப்பொழிவு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பர் மாத மழைப்பொழிவு குறித்த பார்வை

முரசு புயல் வடகோடி மாவட்டங்களுக்கு மழைப்பொழிவைக் கொடுத்தாலும், நவம்பர் மாதம் முழுவதும் தமிழகத்தில் இயல்பை விட அதிக மழைப்பொழிவு பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வானிலை மையம் நவம்பர் மாதத்திற்கான இயல்புக்கு குறைவான மழைப்பொழிவு கணித்திருந்தாலும், இந்த ஆண்டு 25 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகும் என டெல்டா வெதர்மேன் கணித்துள்ளார். தீபாவளி வரை மிதமான அளவில் பருவமழை நீடித்து, தீபாவளி பண்டிகைக்குப் பிறகு (நவம்பர் 10 முதல் 30 வரை) பருவமழை தீவிரம் அடையும். அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் மற்றும் தாழ்வு மண்டலங்கள் உருவாகி தமிழகத்தில் நல்ல மழைப்பொழிவை கொடுக்கும். இது வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் காலகட்டமாகும் என தெரிவித்துள்ளார்

Follow Us