AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அலையாத்தி காடுகளுக்கு கூட்டம் கூட்டமாக படை எடுக்கும் வெளிநாட்டு பறவைகள்.. உற்சாகமாக கண்டுகளிக்கும் சுற்றுலா பயணிகள்!

Foreign Birds in Muthupettai | முத்துப்பேட்டை அலையாத்தி காடுகளில் வெளிநாட்டு பறவைகளின் வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது பருவமழை தொடங்கியுள்ளதன் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் அலையாத்தி காடுகளில் குவிய தொடங்கியுள்ளன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அலையாத்தி காடுகளுக்கு கூட்டம் கூட்டமாக படை எடுக்கும் வெளிநாட்டு பறவைகள்.. உற்சாகமாக கண்டுகளிக்கும்  சுற்றுலா பயணிகள்!
குவியும் வெளிநாட்டு பறவைகள்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 02 Nov 2026 08:24 AM IST

திருவாரூர், நவம்பர் 02 : தமிழகத்தில் (Tamil Nadu) கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக குளிர்ச்சியான கால நிலை நிலவுவதால், முத்துப்பேட்டை அலையாத்தி காட்டில் வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன. கண்களுக்கு இன்பம் அளிக்கும் வகையில் இந்த பறவைகளின் வருகை உள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வெளிநாட்டு பறவைகளை கண்டு ரசித்து செல்கின்றனர். இந்த நிலையில், அலையாத்தி காட்டில் வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அலையாத்தி காடுகளில் குவியும் வெளிநாட்டு பறவைகள்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் அலையாத்தி காடுகள் உள்ளன. இந்த காடுகள் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் பரவி காணப்படுகின்றன. அதாவது, இந்த காடுகள் மேற்கே தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆதிராம்பட்டினம் பகுதியில் இருந்து தொடங்கி, திருவாரூர் மாவட்டத்தை கடந்து, கிழக்கே நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோடியக்கரை பகுதி வரை நீண்டு காணப்படுகிறது.

இதையும் படிங்க : Tamil Nadu Weather Alert: ‘முரசு புயல்’ எதிரொலி.. இந்த மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை

வெளிநாடுகளில் இருந்து குவியும் பறவைகள்

இந்த அலையாத்தி காடுகளில் கோடைக்காலம் மற்றும் குளிர் காலங்களின்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பறவைகள் வந்து முகாமிடும். அந்த வகையில், தமிழகத்தில் தற்போது பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில், அந்த பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக அலையாத்தி காடுகளுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வர தொடங்கியுள்ளன.

இதையும் படிங்க : அரசின் உத்தரவை மீறியதால் நடவடிக்கை.. 3 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்.. அமைச்சர் விக்னேஷ்!

குறிப்பாக நத்தைகுத்தி நாரை, இரவு நாரை, நீலத் தாழைக்கோழி, பாம்புத்தாரா, கூழைக்காடா, துடுப்பு வாயன் உள்ளிட்ட பல்வேறு பறவைகள் அலையாத்தி காடுகளை அலங்கரித்துள்ளன. இதன் காரணமாக அங்கு குவியும் பறவைகளை அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிகவும் ஆர்வமாக கண்டுச் செல்கின்றனர். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் அலையாத்தி காடுகளுக்கு புதுப்பொலிவை கொடுத்துள்ளன.

Follow Us