சொத்துக்காக தாத்தாவை வெட்டி கொலை செய்த பேரன்.. திருநெல்வேலியில் ஷாக் சம்பவம்!
Grandson Arrested for Killing Grandfather in Tirunelveli | சொத்து தகரறு காரணமாக பேரனே, தாத்தாவை வெட்டிக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், பேரனை கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையத்தில் அடைத்துள்ளனர்.
திருநெல்வேலி, நவம்பர் 02 : திருநெல்வேலி (Tirunelveli) மாவட்டம், நாங்குநேரி பகுதியில் சொத்து தகராறு காரணமாக, பேரனே தாத்தாவை வெட்டி படுகொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பேரனை கைது செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சொத்துக்காக பேரனே, தாத்தாவை கொலை செய்த கொடூர சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தாத்தாவை வெட்டி கொலை செய்த பேரன்
திருநெல்வேலியில் உள்ள நாங்குநேரி காவல் நிலைய சரகத்தை சேர்ந்தவர் தளவாய்தேவர். இவரை சொத்து தகராறு காரணமாக நேற்று (நவம்பர் 01, 2026) அதிகாலை 6.30 மணி அளவில் அவரது பேரன் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளார். அதாவது, கிருஷ்ணராஜா என்பவர் அரிவாளால் வெட்டியதில், அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக பலியாகியுள்ளார்.
இதையும் படிங்க : இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ள தயார்.. எதிர்க் கட்சிகளுக்கு அதிமுக டஃப் கொடுக்கும்.. எடப்பாடி கே. பழனிசாமி!




அதிரடியாக கைது செய்துள்ள போலீசார்
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்துச் சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் பலியாகி கிடந்த தளவாய்தேவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையை தொடங்கிய நிலையில், கொலை குற்றவாளி கிருஷ்ணராஜாவை தேடி வந்தனர்.
இதையும் படிங்க : காங்கிரஸை பகைத்தால் முதல்வர் பதவி பறிபோகும் என்ற அச்சமா? மேகதாது விவகாரத்தில் சிஎம் விஜய்யை வெளுத்த நயினார்!
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
அதன்படி, சரியாக கொலை நடந்த வெறும் 3 மணி நேரத்தில் குற்றவாளி கிருஷ்ணராஜாவை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரிடம் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், அவரை சிறையில் அடைத்துள்ளனர். சொத்துக்காக பேரனே தனது தாத்தாவை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.