AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காங்கிரஸை பகைத்தால் முதல்வர் பதவி பறிபோகும் என்ற அச்சமா? மேகதாது விவகாரத்தில் சிஎம் விஜய்யை வெளுத்த நயினார்!

Nainar Criticizes CM Vijay : மேகதாது விவகாரத்தில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் மெளனமாக இருப்பதாகவும், கர்நாடக காங்கிரஸை பகைத்தால் முதல்வர் பதவி பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறாரா என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார் .

காங்கிரஸை பகைத்தால் முதல்வர் பதவி பறிபோகும் என்ற அச்சமா? மேகதாது விவகாரத்தில் சிஎம் விஜய்யை வெளுத்த நயினார்!
முதல்வர் விஜய்- நயினார் நாகேந்திரன்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 01 Nov 2026 19:46 PM IST

மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை பகைத்தால் முதல்வர் பதவி பறிபோகுமோ என்ற அச்சத்தில் விஜய் இருக்கிறாரா என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் கர்நாடக மாநிலம், மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதை பலமுறை வலியுறுத்தியும் அணை கட்டுவதற்காக நிலங்களை அதிவேகமாக கையகப்படுத்தி வருவதாக கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் முதல் அமைச்சர் டி. கே . சிவக்குமார் தெரிவித்துள்ளார். இதற்கு தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார். கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் ஆணவமும், தமிழக வெற்றிக் கழக அரசின் அலட்சியமும் கடும் கண்டனத்துக்குரியது ஆகும்.

தமிழக நீராதாரம் முற்றிலும் தடை படும்

தமிழக வெற்றிக் கழக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி தான் கர்நாடக மாநிலத்தை தற்போது ஆண்டு வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்த பிறகும் தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்து விடுவதற்கு கர்நாடக மாநில அரசு மறுத்து வருகிறது. தமிழ்நாட்டின் நீர் ஆதாரத்தை முற்றிலுமாக தடுப்பதற்கு கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கர்நாடகா அரசு பெருக்க நினைக்கிறது. ஆனாலும், முதல் அமைச்சர் ஜோசப் விஜய் கர்நாடகா காங்கிரஸ் கட்சியை ஏன் எதிர்க்க மறுக்கிறார்.

மேலும் படிக்க: வெடித்த புதிய சர்ச்சை.. ஜூலை 18ம் தேதியே உண்மையான ‘தமிழ்நாடு நாள்’.. திமுக திட்டவட்ட விளக்கம்!

முதல்வர் பதவி பறிபோகும் அச்சமா

ஒரு வேளை கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்தால், தமிழகத்தில் முதல் அமைச்சர் பதவி பறிபோய் விடுமோ என்ற அச்சம் உள்ளதா முதல்வர் அவர்களே என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். கர்நாடக மாநிலம், மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே அம் மாநில அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் காண நீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்று தமிழக அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இதற்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகளும் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். அத்துடன், தமிழக விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

மேகதாதுவில் அணைக்கும் முயற்சியில் கர்நாடக அரசு

அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் மேகதாது பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்ததில், அணை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடகா அரசு மேற்கொண்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியானது. ஆனால், மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டால் தமிழகத்தின் நீர் ஆதாரம் பாதிக்கப்படாது எனவும், கர்நாடகாவை விட தமிழகத்துக்கே அதிக ஆதாயம் இருப்பதாகவும் கர்நாடக அரசு கூறி வருகிறது. அத்துடன், அணை கட்டுவதற்கான முயற்சிகளையும் தீவிரமாக முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: தோல்வியிலும் வெற்றி கண்டது திமுக.. நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் தவெக.. சேகர் பாபு கடும் தாக்கு!

Follow Us