Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Bharatiya Janata Party (BJP) – Tamil Nadu

Bharatiya Janata Party (BJP) – Tamil Nadu

பாரதிய ஜனதா கட்சியின் இந்தியாவின் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றாகும். 1980ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இக்கட்சி பல்வேறு தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான தொண்டர்கள் வளர்த்தெடுக்கப்பட்டு இன்று அசைக்க முடியாத அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. பிரதமராக நரேந்திர மோடி திகழ்கிறார். அவர் தொடர்ச்சியாக 3வது முறை பிரதமராக பதவி வகித்து வருகிறார். இந்த 11 ஆண்டுகளில் பாஜக அனைத்து மாநிலங்களிலும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்றது. குறிப்பாக தென்னிந்தியாவில் தங்கள் பலத்தை காட்டும் வகையில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பாஜக மிகப்பெரும் கட்சியாக வளர்ந்து வருகிறது. பல ஆண்டுகளுக்குப் பின் அக்கட்சி சார்பில் 2021 சட்டமன்ற தேர்தலில் 4 பேர் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய திட்டத்துடன் பாஜக களமிறங்கியுள்ளது. தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் செயல்பட்டு வருகிறார். இந்த தொகுப்பில் தமிழக பாஜக தொடர்பான பல்வேறு தகவல்களையும் நாம் காணலாம்.

Read More

ஆளுநரிடமிருந்து பட்டம் பெற மறுத்த மாணவி.. திமுகவின் தரங்கெட்ட நாடகம்.. அண்ணாமலை காட்டம்..

Annamalai Condemns Dmk: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த மாணவியின் செயலை கண்டித்து, இது திமுகவினரின் தரங்கெட்ட நாடகம் என முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

போராட்டத்துக்கு போறேனா? தடுத்து நிறுத்தப்பட்ட தமிழிசை!

சென்னையில் போராடி வரும் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்க செல்வதாகக் கூறி பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜனை வீட்டிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். இது குறித்து பேசிய தமிழிசை, சுந்தந்திர இந்தியாவில் நான் எங்கு வேண்டுமென்றாலும் செல்லலாம், இப்படி வீட்டிலேயே காவல்துறை தடுப்பது ஜனநாயகம் அல்ல என தெரிவித்தார்.