Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மு.க.ஸ்டாலின் 2-ஆவது முறையாக முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது…அமைச்சர் பி.கே.சேகர்பாபு

Minister PK Sekarbabu Pressmeet: வரும் சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் மீண்டும் வெற்றி பெற்று மு. க. ஸ்டாலின் மீண்டும் முதல் அமைச்சர் ஆவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று அமைச்சர் பி. கே. சேகர்பாபு தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் 2-ஆவது முறையாக முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது…அமைச்சர் பி.கே.சேகர்பாபு
முக ஸ்டாலின் மீண்டும் முதல்வர் ஆவதை தடுக்க முடியாது
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 04 Feb 2026 10:53 AM IST

சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர் பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மக்களுக்கு வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், பள்ளி கட்டிடங்கள், சமுதாய நலக்கூடங்கள், வணிக சந்தைகள், உடற்பயிற்சி கூடங்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், சீரான மின்சாரம் என்பன உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.14 கோடியில் முழுவதுமாக குளிரூட்டப்பட்ட திருமண அரங்கம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெறும் விழால் ஒரே நேரத்தில் 600 பேர் பங்கேற்கும் வகையிலும், 250 பேர் உணவு அருந்தும் வகையிலும், 40- க்கும் மேற்பட்ட 4 சக்கர வாகனங்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் திருமண மண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திருமண மண்டபத்தை வருகிற பிப்ரவரி 8-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

நயினார் நாகேந்திரன் வென்று காட்ட வேண்டும்

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மீண்டும் தொடர வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பமாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொறுப்பை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஏற்ற பிறகு எதிரிகளுக்கு தோல்வியை மட்டுமே பரிசாக வழங்கி வருகிறார். கடந்த முறை திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வென்று காட்ட வேண்டும். அதன் பின்னர் மற்றவர்கள் குறித்து விமர்சனம் செய்ய வேண்டும்.

மேலும் படிக்க: சேலத்தில் மக்களை சந்திக்கும் விஜய்.. எப்போது? அனுமதி கேட்டு கடிதம்..

திமுகவினரை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் மக்கள்

மக்களுடன் கூட்டணி வைத்த திராவிட முன்னேற்ற கழகம், மக்களை நேரடியாக சந்தித்து மக்களுக்கான திட்டங்களை வழங்கி வருகிறோம். அடுத்த தேர்தலுக்கு முன்பாக ஆளும் கட்சி மக்களை சந்திக்கும் போது ஒரு அதிருப்தியான நிலை ஏற்படும். ஆனால், நாங்கள் மக்களை சந்திக்கும் போது, எங்களை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். சிறு சிறு குறைகளை எங்களிடம் சுட்டிக் காட்டுகின்றனரே தவிர, எங்கள் மீது கோபப்படுவது கிடையாது. அந்த குறைகளையும் நிறைய ஆக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி நாங்கள் செயலாற்றி வருகிறோம்.

சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அளிக்கும் வெகுமதி

எனவே, மக்களோடு பயணிக்கும் மக்கள் ஆட்சிக்கு வருகிற சட்டமன்றத் தேர்தலில் பொதுமக்கள் மிகப்பெரிய வெகுமதியை அளிக்க உள்ளனர். 2- ஆவது முறையாக மு. க. ஸ்டாலின் முதல்வராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. தமிழகத்தில் குற்றம் நடப்பதற்கு முன்பு அதனை தடுக்கின்ற முயற்சிகளை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கண்டறிந்து அவர்களுக்கு முறையான தண்டனைகளை வழங்கி வருகிறோம் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: என் கனவு, என் எதிர்காலம் திட்டம்.. விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்..