“சந்தி சிரிக்கும் சர்க்கஸ் சர்க்கார்” தவெக அரசின் 100 ஆட்சியில் 546 குற்ற சம்பவங்கள்…திமுக வீடியோ வெளியிட்டு விமர்சனம்!
TVK Govet 100 Days Dmk Critisized : தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் 100 நாட்கள் ஆட்சியில் 546 குற்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தி தொடர்பாளர் பரந்தாமன் பெரும் குற்றசாட்டை முன் வைத்துள்ளார் .
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்து இன்றுடன் ( ஆகஸ்ட் 17) 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. இந்த நாள்களில் தவெக அரசு அறிவித்த திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து முதல்வர் விஜய் வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், தவெக அரசின் 100 நாட்கள் ஆட்சி குறித்து திமுக வீடியோ வெளியிட்டு கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக, திமுக செய்தி தொடர்பாளர் பரந்தாமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் 100 நாளில் 546 குற்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைப்போம் என்று கூறிய முதல்வர் 100 நாள் ஆட்சியில் 546 குற்றம் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பெண்கள் பாதுகாப்பு எந்த அளவுக்கு உள்ளது என்று நாட்டு மக்களுக்கு தெரியும். தவெகவில் இருக்கும் பெண்களுக்கு கூட பாதுகாப்பு கொடுக்க முடியாத அரசாக உள்ளது.
அமைச்சர்களை கேள்விகளால் ஓட விட்ட மக்கள்
கல்லூரி வளாகத்தில் போதை பொருள் விற்கப்படுகிறது என்று தகவல் தெரிவித்த அந்த மாணவருக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத அரசாக தவெக அரசு உள்ளது. விஜய் அரசுக்கு வாக்களித்த இளைஞர்களில் 10- க்கு மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலைக்கான பழியை முதல்வர் விஜய் ஏற்றுக்கொள்ள வேண்டும். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கோவையில் போதை பொருள் தொடர்பாக தகவல் தெரிவிக்க கல்லூரி மாணவன் அமுதன் கொலை சம்பவத்தை, இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணம் என சட்டப்பேரவையில் அமைச்சர் கூறி வழக்கை திசை திருப்பி உள்ளார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் 2,500 செவிலியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படும்.. அமைச்சர் அருண்ராஜ்
கடந்த ஒரு வாரத்தில் ஏராளமான கொலை சம்பவங்கள்
அந்த கல்லூரி மாணவரின் தாய் தவெக அரசு மீது நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளார். திருவொற்றியூரில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன் ஆகியோரை பொதுமக்கள் கேள்விகளால் ஓட ஓட விரட்டி உள்ளனர். இதுவே, தமிழக வெற்றிக்கழக அரசின் சாதனையாகும். இதே போல, தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டி கேட்ட சிறுவனை அம்மி கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்துள்ளனர். திருவெறும்பூரில் 2 தவெகவினர் ஒருவரை வெட்டி கொலை செய்தனர்.
100 நாள் த.வெ.க ஆட்சியில் சீரழியும் சட்டம்-ஒழுங்கு, விண்முட்டும் விலைவாசி, வேதனையில் மக்கள்! pic.twitter.com/gHBON1a8Oj
— நீதிமான் (@Neethiman3) August 17, 2026
சீர்கேட்டுக்கு வேறென்ன உதாரணம் தேவை
விருதுநகரில் மகளுக்கு காதல் தொல்லை அளித்ததை தட்டி கேட்ட தந்தையை கொலை செய்துள்ளனர். இதே போல, ஏராளமான கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் முக்கியமாக வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் பெண் தலைமை காவலர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இதைவிட சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு வேறு என்ன காரணம் வேண்டும். காவல்துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சர் விஜய் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: காவிரி நீர் விவகாரம்… கர்நாடக மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!