AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs WI: முதல் பந்திலேயே அதிக முறை டக் அவுட்.. விராட் கோலி படைத்த மோசமான சாதனை!

Virat Kohli Duck Out: இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை முதல் பந்திலேயே ஆட்டமிழந்தவர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார். சச்சின் தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 20 முறை முதல் பந்திலேயே ஆட்டமிழந்துள்ளார். தற்போது கோலி இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

IND vs WI: முதல் பந்திலேயே அதிக முறை டக் அவுட்.. விராட் கோலி படைத்த மோசமான சாதனை!
விராட் கோலி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 03 Oct 2026 17:08 PM IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் (Indian Cricket Team) நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். இன்று அதாவது 2026 அக்டோபர் 3ம் தேதி சண்டிகரில் நடந்த போட்டியின் முதல் பந்திலேயே ஜேசன் சீல்ஸ் அவரை ஆட்டமிழக்கச் செய்தார். இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிக முறை கோல்டன் டக் ஆன இந்திய வீரர்களில் கோலி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள விராட் கோலிக்கு (Virat Kohli) இது மோசமான சாதனையாகும்.

கடந்த 2026 செப்டம்பர் 27 ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் கோலி ஆட்டமிழக்காமல் 139* ரன்கள் எடுத்தார். அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 30 ஆம் தேதி குவஹாத்தியில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் கோலி 29 ரன்கள் எடுத்தார். இரண்டு இன்னிங்ஸ்களிலும் கோலி ஆக்ரோஷமாக பேட்டிங் செய்து ரன்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக கோல்டன் டக் ஆன இந்திய வீரர்கள்


இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை முதல் பந்திலேயே ஆட்டமிழந்தவர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார். சச்சின் தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 20 முறை முதல் பந்திலேயே ஆட்டமிழந்துள்ளார். தற்போது கோலி இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். கோலியைத் தவிர, ஜவகல் ஸ்ரீநாத்தும் 19 முறை முதல் பந்திலேயே ஆட்டமிழந்த விரும்பத்தகாத சாதனையைப் படைத்துள்ளார்.

  • சச்சின் டெண்டுல்கர் – 20 முறை
  • விராட் கோலி – 19 முறை
  • ஜவகல் ஸ்ரீநாத்  – 19 முறை,
  • அனில் கும்ப்ளே – 18 முறை
  • யுவராஜ் சிங் – 18 முறை

கோலியிடமிருந்து 100 சதங்கள் வருமா?

கோலி சர்வதேச கிரிக்கெட்டில் ஏற்கனவே 86 சதங்களை அடித்துள்ளார். கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 100 சதங்களை எட்டுவார் என்று ரசிகர்கள் இன்னும் நம்பிக்கையுடன் உள்ளனர். இருப்பினும், கோலி தற்போது இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கோலி டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். எனவே, கோலி தனது மீதமுள்ள சதங்களை ஒருநாள் போட்டிகளிலேயே நிறைவு செய்ய வேண்டியிருக்கும்.

ALSO READ: பாகிஸ்தானின் வெற்றியை பறித்த கேட்ச்.. வைரலாகும் வாஷிங்டன் சுந்தர் வீடியோ!

விராட் கோலியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:

விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 123 டெஸ்ட் போட்டிகள், 316 ஒருநாள் போட்டிகள் மற்றும் 125 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் 9,230 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 15,109 ரன்களும், டி20 சர்வதேசப் போட்டிகளில் 4,188 ரன்களும் எடுத்துள்ளார். மேலும், கோலி ஒருநாள் போட்டிகளில் 5 விக்கெட்டுகளையும், டி20 சர்வதேசப் போட்டிகளில் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

Follow Us