AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs PAK: பாகிஸ்தானின் வெற்றியை பறித்த கேட்ச்.. வைரலாகும் வாஷிங்டன் சுந்தர் வீடியோ!

Washington Sundar Catch: இந்தியா - பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் இந்திய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தங்கம் வென்றது. அபிஷேக் சர்மா, திலக் வர்மா அதிரடி அரைசதங்களுடன் 212 ரன்கள் இலக்கை நிர்ணயிக்க, பாகிஸ்தான் போராடியது. வாஷிங்டன் சுந்தரின் பிரமாதமான கேட்ச் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்து, இந்தியாவிற்கு வெற்றியை உறுதி செய்தது. இந்த வெற்றிப் பயணம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

IND vs PAK: பாகிஸ்தானின் வெற்றியை பறித்த கேட்ச்.. வைரலாகும் வாஷிங்டன் சுந்தர் வீடியோ!
வாஷிங்டன் சுந்தர்
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 03 Oct 2026 16:38 PM IST

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு (IND vs PAK) இடையேயான இறுதிப் போட்டியின் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் வென்ற இந்திய அணி (Indian Cricket Team) முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி, 212 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. இந்த மிகப்பெரிய இலக்கை துரத்தியபோது பாகிஸ்தான் அணி கிட்டதட்ட டார்க்கெட்டை நெருங்கியது. அந்த நேரத்தில், ​​வாஷிங்டன் சுந்தர் பிடித்த கேட்ச் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் வெறும் 192 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக, இந்திய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கத்தை வென்றது.

ALSO READ: வீழ்ந்த வைபவ் சூர்யவன்ஷி விக்கெட்.. பாகிஸ்தான் வீரரின் வினோத கொண்டாட்டம்.. வைரலாகும் வீடியோ!

வாஷிங்டன் சுந்தர் எல்லைக்கோட்டில் ஒரு அருமையான கேட்சைப் பிடித்தார். இந்த கேட்சைப் பிடிப்பதற்காக வாஷிங்டன் சுந்தர் முதலில் எல்லைக்கோட்டிற்கு வெளியே சென்று, பின்னர் திரும்பி வந்து கேட்சைப் பிடித்தார். சுந்தரின் கேட்சை பார்த்த ரசிகர்களுக்கு, சூர்யகுமார் யாதவின் கேட்ச் நினைவுக்கு வந்தது. 2024 டி20 உலகக் கோப்பையில் சூர்யகுமார் யாதவ் இதேபோன்ற ஒரு கேட்சைப் பிடித்திருந்தார், அதன் பிறகு ஆட்டம் இந்தியாவிற்குச் சாதகமாகத் திரும்பி, உலகக் கோப்பையை பெற்று கொடுத்தது.

ரசிகர்கள் பாராட்டு:


தற்போது சுந்தர் பிடித்த ஒரு கேட்ச் எல்லா இடங்களிலும் பேசப்பட்டு, வீடியோ வைரலாகி வருகிறது. பாகிஸ்தானின் மஸ் சதாக்கத்தின் கேட்சை சுந்தர் பிடித்துள்ளார். மஸ் சதாக்கத் 18 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்தார். அவர் அக்சர் பட்டேலின் பந்தை அடிக்க முயன்றபோது ஆட்டமிழந்தார். இதன் வீடியோ தற்போது பெருமளவில் வைரலாகி வருகிறது.

ALSO READ: பயம்காட்டிய நவாஸ்.. போராடிய இந்திய பவுலர்கள்.. தங்கத்தை தூக்கிய ஷ்ரேயாஸ் படை!

இந்திய அணிக்காக அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா மட்டுமே சிறப்பாகச் செயல்பட்டனர். அபிஷேக் திலக்கின் ஜோடி பாகிஸ்தானை நசுக்கியது. அபிஷேக் சர்மா 61 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவர் இந்தப் போட்டியில் 61 ரன்கள் எடுத்தார். 3 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களின் உதவியுடன் வெறும் 28 பந்துகளில் இந்த ஸ்கோரை அவர் எடுத்தார். பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் திலக் வர்மா ஒரு அற்புதமான இன்னிங்ஸை விளையாடி, 22 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸ் இந்திய அணி 200 ரன்களைக் கடக்க உதவியது. வைபவ் சூர்யவன்ஷி, கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அவர்களால் எதிர்பார்த்தபடி செயல்பட முடியவில்லை. பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களாலும் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை.

Follow Us