AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உலகக் கோப்பை 2027 : சூப்பர் 7 சுற்று என்றால் என்ன? போட்டிகள் எப்படி நடக்கும்?

ICC ODI World Cup 2027 : ஒருநாள் உலகக் கோப்பை 2027 அட்டவணை அக்டோபர் 1, 2026 அன்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த முறை சூப்பர் 7 என்ற புதிய சுற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி குரூப் சுற்றுக்கு பிறகு, அணிகள் சூப்பர் 7 சுற்றில் போட்டியிடும் என கூறப்படுகிறது.

உலகக் கோப்பை 2027 : சூப்பர் 7 சுற்று என்றால் என்ன? போட்டிகள் எப்படி நடக்கும்?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 02 Oct 2026 19:21 PM IST

ஒருநாள் உலகக் கோப்பை 2027 அட்டவணை அக்டோபர் 1, 2026 அன்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த முறை சூப்பர் 7 என்ற புதிய சுற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி குரூப் சுற்றுக்கு பிறகு, அணிகள் சூப்பர் 7 சுற்றில் போட்டியிடும் என கூறப்படுகிறது. இதனால் உலகக்கோப்பை 2027ல் இந்தியாவும் பாகிஸ்தானும் 2 முறை நேருக்கு நேர் மோத வாய்ப்புள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் 2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐசிசி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்தத் தொடரை மேலும் விறுவிறுப்பாக்குவதற்காக ஐசிசி பல முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. குறிப்பாக, கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில், அரையிறுதிப் போட்டிகளுக்கு முன்பு புதிய சூப்பர் 7 என்ற புதிய சுற்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதற்கு முன்பு, குரூப் சுற்றுக்குப் பிறகு நேரடியாக அரையிறுதிப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆனால் இந்த முறை, ஐசிசி அந்த முறையை மாற்றி, அணிகளுக்கு இடையேயான போட்டியை மேலும் விறுவிறுப்பாக்க முடிவு செய்துள்ளது. இந்த புதிய சூப்பர் 7 சுற்று மூலம் உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பு உச்சத்தை எட்டும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

இதையும் படிக்க : ஆசிய விளையாட்டுப்போட்டி.. குத்துச்சண்டையில் லவ்லினா போர்கோஹைன் தங்கம்

சூப்பர் 7 சுற்று என்றால் என்ன?

2027 ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்கும் 12 அணிகளும், தலா ஆறு அணிகள் கொண்ட இரண்டு குரூப்க்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ குரூப்பில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் ஒரு தகுதிச்சுற்று அணி இடம்பெற்றுள்ளன. ‘பி’ குரூப்ல் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் ஒரு தகுதிச்சுற்று அணி இடம்பெற்றுள்ளன.

குரூப் சுற்றுக்குப் பிறகு, ஒவ்வொரு குரூப்பிலிருந்தும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக சூப்பர் 7 சுற்றுக்குத் தகுதி பெறும். இரு குரூப்களிலும் நான்காவது இடத்தைப் பிடித்த அணிகளுக்கு இடையேயான புள்ளிகள், வெற்றிகள் மற்றும் நிகர ரன் விகிதத்தின் அடிப்படையில் ஏழாவது அணி தீர்மானிக்கப்படும்.

இதையும் படிக்க : 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா எப்போது, ​​எந்த அணியை எதிர்கொள்ளும்? முழு அட்டவணை

இந்த சூப்பர் 7 கட்டத்திற்குள் நுழைந்த பிறகு, குரூப் சுற்றில் பெற்ற புள்ளிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. புள்ளிப் பட்டியல் மீண்டும் ஜீரோவில் இருந்து தொடங்கும். அதாவது, ஒவ்வொரு அணியும் மொத்தம் 6 போட்டிகளில் விளையாடும். இந்தக் கட்டத்தில் மொத்தம் 21 போட்டிகள் நடைபெறும். சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் 4 இடங்களுக்குள் வரும் அணிகள் மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி பெறும். முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட விதிகளின்படி, ரசிகர்களுக்கு எந்தக் குழப்பமும் ஏற்படாத வகையில் போட்டிகளின் அட்டவணை முன்கூட்டியே தெளிவுபடுத்தப்படும். மேலும் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை குறைந்தபட்சம் 2 முறையாவது பார்க்க முடியும் என கூறப்படுகிறது.

Follow Us