Asian Games 2026: பைனலில் மோதும் இந்தியா – பாகிஸ்தான்.. போட்டியை எப்போது, எங்கு காணலாம்?
India vs Pakistan Final: 2026 ஆசிய விளையாட்டு கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கப் பதக்கத்திற்காக மோதுகின்றன. இலங்கையை இந்தியா வெல்ல, பாகிஸ்தான் வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. இந்த பெரும் எதிர்பார்ப்புமிக்கப் போட்டி அக்டோபர் 3, 2026 அன்று ஜப்பானில் நடைபெற உள்ளது. தலைக்குத் தலை மோதலில் இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (2026 Asian Games) கிரிக்கெட் தங்கப் பதக்கத்திற்காக இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. அரையிறுதியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணியும் (Indian Cricket Team), வங்கதேச அணியை வீழ்த்தி வங்கதேச அணியும் பைனலுக்கு தகுதி பெற்றது. இந்த இரு அணிகளும் மீண்டும் ஒருமுறை கிரிக்கெட் களத்தில் நேருக்கு நேர் மோதுவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதன் காரணமாக, உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்தப் போட்டியை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். இந்தத் தங்கப் பதக்கப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற ஆர்வம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
ALSO READ: மழை கொடுத்த ஷாக்! வங்கதேசம் பேட்டிங்கில் வீக்.. போராடி பைனலுக்கு சென்ற பாகிஸ்தான்!
இலங்கையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா:
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்தியா இலங்கையை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த மகத்தான வெற்றியின் மூலம், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மறுபுறம், பாகிஸ்தான் முதல் அரையிறுதிப் போட்டியில் வங்கதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. எனவே, தற்போது தங்கப் பதக்கத்திற்காக சாஹிப்சாதா ஃபர்ஹான் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணிக்கும் இடையே ஒரு விறுவிறுப்பான போட்டி நடைபெற உள்ளது.




இந்தியா-பாகிஸ்தான் இறுதிப் போட்டி எப்போது, எங்கே நடைபெறும்?
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இறுதி ஆட்டம், ஜப்பானின் நிஷின் நகரில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில், வருகின்ற 2026 அக்டோபர் 3ம் தேதி நடைபெற உள்ளது. ஆட்டம் காலை 10 மணிக்குத் தொடங்கும், டாஸ் காலை 9.30 மணிக்கு நடைபெறும்.
இரு அணிகலும் இதுவரை நேருக்குநேர்:
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இதுவரை மொத்தம் 17 டி20 சர்வதேசப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இவற்றில், இந்தியா 14 போட்டிகளிலும், பாகிஸ்தான் 3 போட்டிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், இந்த இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி 6 டி20 போட்டிகளிலும் இந்தியா தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. எனவே, இறுதிப் போட்டிக்கு முன்னரான இந்தப் புள்ளிவிவரம், இந்திய அணிக்கு நிச்சயமாக ஒரு தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
ALSO READ: இந்தியா அபார வெற்றி.. பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டிக்கு தயார்
கடந்த போட்டியிலும் இந்தியாவின் மகத்தான வெற்றி
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி, 2026 பிப்ரவரி 15ம் தேதி டி20 உலகக் கோப்பையில் நடைபெற்றது. இலங்கையில் உள்ள ஆர். பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்தியா முதலில் பேட் செய்து 175 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து, இந்திய பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தானின் இன்னிங்ஸை வெறும் 114 ரன்களுக்குள் சுருட்ட, இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சுவாரஸ்யமாக, அதே ஆண்டில் இந்தியா டி20 உலகக் கோப்பை பட்டத்தையும் வென்றது.