தோனிக்கு பிரியாவிடை கொடுக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும்! – மு.க.ஸ்டாலின் உருக்கம்
MK Stalin On Dhoni Retirement: மு.க.ஸ்டாலின் தனது பதிவில், “தோனி சென்னைக்கு கோப்பைகளை மட்டும் வழங்கவில்லை. பல தலைமுறைகளை ஒன்றிணைத்த உணர்வையும், கிரிக்கெட்டைத் தாண்டிய பிணைப்பையும் அவர் உருவாக்கினார். எல்லா நல்ல விஷயங்களுக்கும் ஒருநாள் முடிவு வரும் என்பது உண்மைதான் என குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் 17, 2026: ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக எம்.எஸ்.தோனி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2027ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக தோனி செயல்படுவார் என அந்த அணி நிர்வாகமும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. தோனியின் இந்த அறிவிப்பு சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் உணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தோனியின் ஓய்வு குறித்து திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் உருக்கமான பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
கோப்பைகளைத் தாண்டி உணர்வுபூர்வமான பிணைப்பை உருவாக்கியவர் – மு.க.ஸ்டாலின்
Dhoni gave #Chennai much more than trophies. He gave us an emotion that united generations and forged a bond that transcended cricket.
As the saying goes, all good things must come to an end. We only wish we had one last chance to give Tamil Nadu’s beloved adopted son the farewell he so richly deserved.
Thank you, @msdhoni, for the countless moments of joy, the glorious triumphs and the memories we will cherish forever. Wishing you the very best in your new innings as #CSK’s mentor. 💛
#MSDhoni #MSD #Dhoni #IPL— M.K.Stalin (@mkstalin) November 17, 2026
மு.க.ஸ்டாலின் தனது பதிவில், “தோனி சென்னைக்கு கோப்பைகளை மட்டும் வழங்கவில்லை. பல தலைமுறைகளை ஒன்றிணைத்த உணர்வையும், கிரிக்கெட்டைத் தாண்டிய பிணைப்பையும் அவர் உருவாக்கினார். எல்லா நல்ல விஷயங்களுக்கும் ஒருநாள் முடிவு வரும் என்பது உண்மைதான். ஆனால், தமிழகத்தின் அன்புக்குரிய மகனாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தோனிக்கு, அவர் தகுதியான பிரியாவிடையை வழங்குவதற்கான கடைசி ஒரு வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.
எண்ணற்ற மகிழ்ச்சியான தருணங்கள், மகத்தான வெற்றிகள் மற்றும் என்றும் நினைவில் நிற்கும் நினைவுகளை வழங்கியதற்கு நன்றி தோனி. சிஎஸ்கே அணியின் ஆலோசகராக உங்களது புதிய பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஹெலிகாப்டர் ஷாட்கள், ஸ்டம்பிங் என ரசிகர்களை கவர்ந்த தோனி – உதயநிதி
In the era of the IPL, one man who has given millions of people across Tamil Nadu countless unforgettable memories is now stepping away from the field.
Fans of CSK will miss those iconic helicopter shots, brilliant stumpings, exceptional captaincy and the composure with which he turned difficult situations into memorable victories.
Thank you @msdhoni, for all the beautiful memories and incredible moments. Tamil Nadu, especially Chennai, will always hold a special place in its heart for you.
As you take on a new role as the mentor of CSK, my very best wishes.
— Udhay (@Udhaystalin) November 17, 2026
உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில், “ஐபிஎல் காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு மறக்க முடியாத பல நினைவுகளை வழங்கிய ஒருவர் தற்போது களத்தில் இருந்து விலகுகிறார். தோனியின் புகழ்பெற்ற ஹெலிகாப்டர் ஷாட்கள், அசத்தலான ஸ்டம்பிங், சிறப்பான கேப்டன்சி மற்றும் இக்கட்டான சூழல்களையும் வெற்றிகரமான தருணங்களாக மாற்றிய அவரது நிதானம் ஆகியவற்றை சிஎஸ்கே ரசிகர்கள் நிச்சயம் இழப்பார்கள்.
மேலும் படிக்க: கடன் பிரச்னை, ஆடம்பர வாழ்க்கைக்காக தனிஷ்க் நகைக்கடையில் கொள்ளை! யூடியூபர் நிஷாந்த் குறித்து காவல் ஆணையர் பரபரப்பு தகவல்
அழகான நினைவுகள் மற்றும் மறக்க முடியாத தருணங்களை வழங்கியதற்கு நன்றி தோனி. தமிழகம், குறிப்பாக சென்னை, எப்போதும் உங்களைத் தனது இதயத்தில் தனி இடத்தில் வைத்திருக்கும். சிஎஸ்கே அணியின் ஆலோசகராகப் புதிய பொறுப்பை ஏற்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.