அரசு பேருந்தை நிறுத்தி டாஸ்மாக் கடையில் மது வாங்கிய விவகாரம் – ஓட்டுநர், நடத்துநர் பணி நீக்கம்
Tenkasi Government Bus Liquor Controversy : சங்கரன்கோவிலில் இருந்து கோவில்பட்டி நோக்கி சென்ற என்ற பதிவு எண் கொண்ட அரசுப் பேருந்து, தற்காலிகப் பேருந்து நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடை முன்பு பேருந்து நிறுத்தப்பட்டு. மதுபானம் வாங்கியதாகக் கூறப்படும் நிலையில் நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி, நவம்பர் 17 : தென்காசி (Tenkasi) மாவட்டம் சங்கரன்கோவிலில், பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்தை டாஸ்மாக் மதுக்கடை முன்பு நிறுத்தி மதுபானம் வாங்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரையும் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தற்காலிகமாகப் பணி நீக்கம் செய்துள்ளனர்.
அரசு பேருந்தை நிறுத்தி டாஸ்மாக் கடையில் மது வாங்கிய விவகாரம்
சங்கரன்கோவிலில் இருந்து கோவில்பட்டி நோக்கி சென்ற என்ற பதிவு எண் கொண்ட அரசுப் பேருந்து, தற்காலிகப் பேருந்து நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது, பயணிகள் பேருந்தில் இருந்த நிலையிலேயே, சாலையோரத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடை முன்பு பேருந்து நிறுத்தப்பட்டது. பின்னர், பேருந்தில் இருந்த ஒருவர் மதுபானப் பாட்டில் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க : 1 மணி நேரத்திற்குள் ரூ.1 கோடி கொள்ளை – சென்னை தனியார் நிறுவன வங்கிக் கணக்கை ஹேக் செய்த கொள்ளையர்கள் – பகீர் தகவல்




இதனைப் பார்த்த பொதுமக்களில் ஒருவர், பேருந்து டாஸ்மாக் கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த காட்சியைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ வேகமாகப் பரவி, பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து, சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அரசுப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரையும் தற்காலிகமாகப் பணி நீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பயணிகளின் பாதுகாப்பையும் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் நற்பெயரையும் கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தென்காசி, சங்கரன்கோவில் அருகே அரசு பேருந்தை நிறுத்தி மது வாங்கிய விவகாரத்தில் ஓட்டுநர் கணேசமூர்த்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் தினக்கூலி நடத்துனர் முத்தையா டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான நிலையில் தூத்துக்குடி பொது மேலாளர் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : தமிழக சட்டசபை குளிர்கால கூட்ட தொடர் நடக்குமா? அரசு வட்டாரத்தில் கசியும் தகவல்.. என்ன அது!
முன்னதாக பேருந்துகளில் பயணிகளை ஏற்ற மறுக்கவோ, பாதிவழியில் இறக்கிவிடவோ கூடாது என்று போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது. நிறுத்தங்களில் பேருந்துகளை நிறுத்தி, பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி இறக்க வேண்டும். பேருந்துகளை தூய்மையாக பராமரித்து, பயணிகளை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தது. இந்த நிலையில் பயணிகளுடன் சென்ற அரசு பேருந்தை டாஸ்மாக் முன் நிறுத்தி மது வாங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.