AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

40 நாட்களில் ரூ.1.38 கோடி அபராதம் வசூல்.. பரனூர் டோல்கேட்டில் 3.85 லட்சம் வாகன ஓட்டிகள் செய்த தவறு.. மீறினால் என்ன நடக்கும்!

Paranur toll plaza : பரனூர் சுங்கச் சாவடியில் கடந்த 40 நாள்களில் விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.1 கோடியை 38 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அபராத தொகை செலுத்தாத வாகன ஓட்டுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

40 நாட்களில் ரூ.1.38 கோடி அபராதம் வசூல்.. பரனூர் டோல்கேட்டில் 3.85 லட்சம் வாகன ஓட்டிகள் செய்த தவறு.. மீறினால் என்ன நடக்கும்!
கோப்புப்படம்.Image Source: pinrest
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 17 Nov 2026 08:50 AM IST

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை தாம்பரம் டு திண்டிவனம் சாலையில் உள்ள பரனூர் சுங்கசாவடியில் விதிகளை மீறியதாக 40 நாட்களில் 3.85 லட்சம் வாகன ஓட்டிகளிடம் ரூ.1.38 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவுக்கு முன்னரே மைக்ரோ ஸ்கேனிங் மூலமாக வாகனங்கள் நம்பர் பிளேட்டுகள் ஸ்கேன் செய்யப்பட்டு அதன் வாயிலாக தானியங்கி முறையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில், சென்னை- திருச்சி மார்க்கம், திருச்சி- சென்னை மார்க்கெட்டில் சென்று வரும் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிற்காமலே ஸ்கேன் செய்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது எரிபொருள் மற்றும் வாகன ஓட்டிகளின் நேரம் மிச்சம் படுவதோடு, போக்குவரத்து நெரிசலையும் வெகுவாக குறைக்கிறது. மேலும், சுங்கசாவடி அவர்களை மிகவும் வெளிப்படையாக, செலவு குறைந்ததாக மாற்றுகிறது.

40 நாள்களில் 3.85 லட்சம் வாகன ஓட்டிகள் விதிமீறல்

இந்த நிலையில், பரனூர் சுங்கச்சாவடியில் தடுப்புகள் இல்லாத தானியங்கி கட்டண முறை அறிமுகம் செய்யப்பட்ட கடந்த 40 நாட்களில் சுமார் 3.85 லட்சம் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் விதி மீறலில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, சுமார் 3.27 லட்சம், இ- செல்லான்கள் வாயிலாக ரூ. 1.38 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறுகையில், கடந்த அக்டோபர் மாத முதல் நவம்பர் மாதம் வரை 40 நாட்களில் பரனூர் சுங்க சாவடியை சுமார் 24.69 லட்சம் வாகனங்கள் கடந்து சென்றுள்ளன.

மேலும் படிக்க: ஆதவ் வாழ்வில் வீசிய விவாகரத்து புயல்.. Divorce- க்கு இதுதான் காரணமா? பெரியம்மா திலகவதி கூறியதை பாருங்க!

கட்டணம் செலுத்தாத வாகனங்களுக்கு இரட்டை மடங்கு அபராதம்

இதில், சுமார் 20.83 லட்சம் வாகனங்கள் முறையாக பாஸ்டேக் கட்டணம் உள்ளன. போதிய பணம் இல்லாதது, பிளாக் லிஸ்ட் செய்யப்பட்ட அட்டை, பாஸ்ட் டேக் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் சுமார் 3 லட்சத்து 85 ஆயிரத்து 679 வாகனங்கள் விதிமீறலில் ஈடுபட்டு உள்ளன. கட்டணம் செலுத்தாத வாகனங்களுக்கு வாகன் தளம் மூலமாக இரட்டை மடங்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக இ- செல்லான் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அபராத தொகையை 72 மணி நேரத்துக்குள் ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும்.

பாஸ்டேக் முடக்கம்- பிற சுங்கச்சாவடியை கடக்க தடை

அவ்வாறு செலுத்தினால், 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். தவறும் பட்சத்தில், சமந்தப்பட்ட வாகனத்தின் பாஸ்டேக் முடக்கம் செய்யப்படுவதுடன் பிற சுங்க சாவடிகளை கடக்கவும் தடை செய்யப்படும். அத்துடன் வாகன பெயர் மாற்றம், தடையில்லா சான்று உள்ளிட்ட சேவைகளைப் பெறவும் முடியாது. 40 நாட்களில் 3,27,927 இ- செல்லான்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், 68,226 வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ. ஒரு கோடியே 38 லட்சத்து 8,290 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அத்துமீறினா அதிரடி தான்.. லத்தியை கையில் எடுக்கும் சிறை காவலர்கள்.. சிறைத்துறை அதிரடி உத்தரவு!

Follow Us