AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஆதவ் வாழ்வில் வீசிய விவாகரத்து புயல்.. Divorce- க்கு இதுதான் காரணமா? பெரியம்மா திலகவதி கூறியதை பாருங்க!

Adhav Arjuna Divorce Reason : தமிழக பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, டெய்சி மார்ட்டின் விவாகரத்துக்கு என்ன காரணம் என்பதை ஆதவின் பெரியம்மாவும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான திலகவதி தெரிவித்துள்ளார். அவர் கூறியதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ஆதவ் வாழ்வில் வீசிய விவாகரத்து புயல்.. Divorce- க்கு இதுதான் காரணமா? பெரியம்மா திலகவதி கூறியதை பாருங்க!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 17 Nov 2026 07:00 AM IST

தமிழக பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் மனைவியும், லாட்டரி அதிபர் சாண்டியாகோ மகளுமான டெய்சி திருமண உறவில் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளார். இதற்கு காரணம் என்ன என்பதை ஆதவ் அர்ஜுனாவின் பெரியம்மா திலகவதி விளக்கியுள்ளார். அது என்ன என்பதை பார்ப்போம்…! தமிழக பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்து வரும் ஆதவ் அர்ஜுனா, பிரபல லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் மகள் டெய்சி மார்ட்டினை காதலித்து கடந்த 2012- ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்ற இந்த திருமணத்தில் தம்பதிக்கு மகன் இருந்து வருகிறார். கடந்த மே மாதம் அமைச்சராக ஆதவ் அர்ஜுனா பதவி ஏற்ற நிகழ்ச்சியில் அவரது மனைவி டெய்சி பங்கேற்று இருந்தார். இந்த நிலையில், தனது கணவரை பிரிவதாக டெய்சி திடீரென அறிவித்திருந்தார்.

ஆதவ் அர்ஜூனா விவாகரத்துக்கு என்ன காரணம்

இது தொடர்பாக, டெய்சி தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதன் மூலம் அவர்களின் 14 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக ஆதவ் அர்ஜுனாவின் பெரியம்மாவும், தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியுமான திலகவதி தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: டெய்சி மார்ட்டின் குடும்பத்தினர் வேறு கட்சியில் பயணித்து வருகின்றனர். ஆதவ் அர்ஜுனா வேறு கட்சியில் பயணித்து வருகிறார். இதனால், அவர்கள் இடையே சில கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

மேலும் படிக்க: ரூ.100 கோடி முறைகேட்டில் புழல் சிறையில் அடைப்பு.. 3- ஆவது முறையாக உயிர் நண்பன் அன்பிலை சந்தித்த உதயநிதி.. என்ன காரணம்!

ஆதவ் அர்ஜூனா- டெய்சி வாழ்வில் வீசிய புயல்

இருந்தாலும், அவர்கள் விஷயத்தில் நான் மேற்கொண்டு வேறு ஏதேனும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அந்த விஷயத்துக்குள் அதிகம் செல்ல விரும்பவில்லை. தனியுரிமையை மதிக்க வேண்டும். ஆதவ் அர்ஜுனா, டெய்சி மார்ட்டின் ஆகியோர் நண்பர்களாகவே பிரிகின்றனர் என்று தெரிவித்திருந்தார். ஆதவ் அர்ஜுனாவின் திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென அவர்களது வாழ்வில் புயல் வீசி உள்ளது. அவரது மனைவி திடீரென திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

சமூகவலைதளங்களில் எழுப்பப்படும் கேள்விகள்

இதற்கு, என்ன காரணம் இருக்கும் என்று சமூக வலைத்தளங்களில் பரவலாக கேள்விகள் எழுப்பப்பட்டும், அவர்களது பிரிவு தொடர்பான அறிக்கைகள் பரப்பப்பட்டும் வந்தது. இந்த நிலையில், ஆதவ் அர்ஜூனா, டெய்சி மார்ட்டின் பிரிவுக்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதை அர்ஜுனாவின் பெரியம்மா திலகவதி தெரிவித்து இருப்பது முக்கியத்துமாக பார்க்கப்படுகிறது. அதே வேளையில், இதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: மதுரை தனிஷ்க் கொள்ளை.. இன்ஸ்டா மீனாட்சி தாய்க்கு தொடர்பா? விசாரணையில் அதிரடி காட்டிய போலீசார்!

Follow Us