மது கொடுத்து பாலியல் அத்துமீறல்.. ஜெகஜால கில்லாடியான பிக்பாஸ் முத்துக்குமரன்.. இளம்பெண் அடுக்கிய குற்றச்சாட்டு!
Bigg Boss Muthukumaran : தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி மது கொடுத்து உல்லாசம் அனுபவித்து விட்டு திருமணம் செய்ய மறுத்து வரும் பிக்பாஸ் முத்துக்குமரன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் புகார் அளித்துள்ளார்.
பட்டிமன்ற பேச்சாளரும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவருமான முத்துக்குமரன் மீது இளம்பெண் ஒருவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னிடம் உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றியதாக அந்த இளம் பெண் குறிப்பிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முத்துக்குமரன் என்பவர் சம்பந்தப்பட்ட இளம் பெண்ணுடன் வெகு நாட்களாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அந்தப் பெண்ணிடம் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது. இதில், இருவர் இடையே இருந்த பழக்கம் ஒரு கட்டத்தை மீறிய நிலையில், இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஒரு கட்டத்துக்குப் பிறகு அந்தப் பெண்ணுடன் பிக்பாஸ் முத்துக்குமரன் தொடர்ந்து பழகுவதை தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
பிக்பாஸ் முத்துக்குமரன் மீது இளம்பெண் புகார்
இந்த நிலையில்தான், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அந்த இளம்பெண் புகார் அளித்துள்ளார். இதில், பிக்பாஸ் முத்துக்குமரன் தன் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னிடம் உல்லாசமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கேட்டதற்கு தன்னை மிரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன், என்னை கைவிடும் நோக்கில் செயல்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் படிக்க: முதல்வரின் திருச்சி வருகை.. விமான நிலையம் முதல் புத்தூர் வரை.. முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!




கட்டாயப்படுத்தி மது கொடுத்து பாலியல் வன்கொடுமை
இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் கூறுகையில், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக பிக்பாஸ் முத்துக்குமரனுக்கு, எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம், நாளடைவில் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு பேசும் அளவுக்கு சென்றது. அப்போது, ஒரு கட்டத்தில் அவர் வீட்டுக்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுத்தார். அதன் அடிப்படையில், நான் அவரது வீட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது, என்னை கட்டாயப்படுத்தி மது அருந்த செய்தார். அத்துடன், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்தார்.
வாக்குறுதி படி திருமணம் செய்து கொள்ள வேண்டும்
இது பல நாட்களாக தொடர்ந்த நிலையில், ஒரு கட்டத்தில் என்னை ஏமாற்றும் வகையில், செயல்பட தொடங்கியதுடன், என்னிடம் பேசுவதையும் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக, நான் அவரிடம் கேட்டதற்கு திருமணம் செய்து கொள்ள தயாராக இல்லை என்று கூறி என்னிடம் பேசுவதை முழுமையாக நிறுத்திக் கொண்டார். இதன் காரணமாக நான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானேன். அத்துடன், தற்கொலை முடிவையும் கையில் எடுத்தேன். எந்த வாக்குறுதி அளித்து என்னுடன் உடல் ரீதியாக பழகினாரோ, அந்த வாக்குறுதிப்படி என்னை திருமணம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: போலி நூல்கள் கொள்முதல் விவகாரம்.. வசமாக சிக்கிய அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர்.. கைது செய்த போலீசார்!