AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முதல்வரின் திருச்சி வருகை.. விமான நிலையம் முதல் புத்தூர் வரை.. முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

Chief Minister Joseph Vijay Visit Trichy : முதல்வர் ஜோசப் விஜய் வரும் 20- ஆம் தேதி திருச்சி செல்ல உள்ள நிலையில், மாநகரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் பல்வேறு கட்ட முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

முதல்வரின் திருச்சி வருகை.. விமான நிலையம் முதல் புத்தூர் வரை.. முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!
கோப்புப்படம்.
Deepan
Deepan | Published: 16 Nov 2026 16:11 PM IST

முதல்வர் விஜய் வருகிற நவம்பர் 20- ஆம் தேதி அரசு முறை பயணமாக திருச்சிக்கு வருகை தர உள்ளார். இதையொட்டி, திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வருகிற நவம்பர் 20- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) முதல்வர் விஜய் காலை 9 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்டு 10 மணிக்கு விமான நிலையத்துக்கு வருகை தருகிறார். அங்கிருந்து, சாலை மார்க்கமாக புத்தூர் பகுதிக்கு செல்லும் அவருக்கு வழி நெடுகிலும் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க உள்ளனர். இதைத் தொடர்ந்து, திருச்சி மாவட்டம், புத்தூர் பகுதியில் உள்ள ரூ. 110 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன மருத்துவ எங்களுடன் கூடிய புதிய கட்டடம்.

திருச்சியில் அரசு விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்பு

மேலும், ஒரே நேரத்தில் சுமார் 500- க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிறப்பு சிகிச்சை பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்வை தொடர்ந்து, அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே உள்ள தமிழ்நாடு ஹோட்டல் வளாகத்துக்கு முதல்வர் விஜய் செல்ல உள்ளார். அங்கு நடைபெறும் அரசு விழாவில் விஜய் பங்கேற்று பேசுகிறார். இதைத் தொடர்ந்து, பலகோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளை முதல்வர் விஜய் தொடங்கி வைப்பதுடன், பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

மேலும் படிக்க: செக்கானூரணி லாக்கப் மரணம்.. ஓட்டுநரை போலீசார் அடித்து கொன்றனரா? போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அதிர்ச்சி தகவல்!

தவெக கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை

இதைத் தொடர்ந்து, அரசு நிகழ்ச்சிகளை முடித்த பின்னர், தமிழக வெற்றுக் கழகத்தின் கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளும் முதல்வர் விஜய், பிற்பகல் திருச்சி விமான நிலையம் சென்று அங்கு இருந்து தனி விமானம் மூலமாக சென்னை புறப்பட்டு செல்கிறார். முதல் அமைச்சரின் இந்த வருகையை முன்னிட்டு, திருச்சி மாநகரத்தில் கட்சியினர் மற்றும் அரசு சார்பில் பல்வேறு முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் திருச்சி விமான நிலையம் முதல் புத்தூர் அரசு மருத்துவமனை வரை முக்கிய சாலைகளின் நடுவே அமைந்துள்ள தடுப்பு சுவர்களின் இருபுறமும் வண்ணங்கள் பூசும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

திருச்சி மாநகர ஆணையர் தலைமையில் பாதுகாப்பு

அத்துடன் சாலைகளின் இருபுறமும் குப்பைகள் அகற்றப்பட்டு, அந்தப் பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சி அரசு மருத்துவமனையின் முகப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு வர்ணம் பூசும் பணிகளும், மருத்துவமனை வளாகத்தில் புதிய தார் சாலை நடைபெற்று வருகின்றன. திருச்சி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: பணத்தாசை யாரை விட்டது! 2014 முதல் 2024 வரை கூட்டுறவு வழங்கியில் நடந்த மோசடி.. நாகர்கோவிலிலில் போலீசிடம் சிக்கிய 4 பேர்!

Follow Us