AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரூ.100 கோடி முறைகேட்டில் புழல் சிறையில் அடைப்பு.. 3- ஆவது முறையாக உயிர் நண்பன் அன்பிலை சந்தித்த உதயநிதி.. என்ன காரணம்!

Udhayanidhi Meets Anbil Mahesh : ரூ. 100 கோடி முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்டு புழள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்பி ல் மகேஷ் பொய்யாமொழியை எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று 3- ஆவது முறையாக சந்தித்தார் .

ரூ.100 கோடி முறைகேட்டில் புழல் சிறையில் அடைப்பு.. 3- ஆவது முறையாக உயிர் நண்பன் அன்பிலை சந்தித்த உதயநிதி.. என்ன காரணம்!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 16 Nov 2026 16:51 PM IST

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளி உரிமையாளர்களிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியை 3- ஆவது முறையாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று சந்தித்தார். சென்னை வடபழனியில் போலியான தனியார் பள்ளிகள் சங்கம் நடத்திய பி.டி. அரசகுமார் என்பவர் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக கூறி பல்வேறு தனியார் பள்ளிகளின் உரிமையாளர்களிடம் நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை பெற்றுத் தருவதாக கூறி ரூ.100 கோடி வரை பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்பு இருப்பதாக ஊழல் தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

புழல் சிறையில் அன்பில் மகேஷை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்

அதன் அடிப்படையில், அவரை கைது செய்த போலீசார் சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர். அவரை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே இருமுறை சந்தித்து நலம் விசாரித்த நிலையில், இன்று திங்கட்கிழமை ( நவம்பர் 16- ஆம் தேதி) 3- ஆவது முறையாக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, ஜாமீன் விவகாரம் தொடர்பாக இருவரும் பேசியதாக தெரிகிறது. இந்த நிலையில், அன்பில் மகேஷ் ஜாமீன் கோரிய மேல்முறையீட்டு மனு மீது போலீசார் அவகாசம் கோரியிருந்தனர்.

மேலும் படிக்க: செக்கானூரணி லாக்கப் மரணம்.. ஓட்டுநரை போலீசார் அடித்து கொன்றனரா? போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அதிர்ச்சி தகவல்!

அன்பில் மகேஷ் மேல்முறையீட்டு மனு விசாரணை

இது தொடர்பான விசாரணை நாளை செவ்வாய்க்கிழமை ( நவம்பர் 17- ஆம் தேதி) சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில்தான், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி- அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்திப்பு நிகழ்ந்துள்ளது. தனியார் பள்ளி உரிமையாளர்களிடம் பெற்ற பணத்தை முத்துக்குமார் என்பவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் கொடுத்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அதன் அடிப்படையில், அன்பில் மகேஷ் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டிருந்தனர்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது பின்னணி

இதில், பல்வேறு வகையான ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதன் அடிப்படையில், அன்பில் மகேஷை கைது செய்வதற்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இதனிடையே, தனக்கு முன் ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி ஆன நிலையில், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: பணத்தாசை யாரை விட்டது! 2014 முதல் 2024 வரை கூட்டுறவு வழங்கியில் நடந்த மோசடி.. நாகர்கோவிலிலில் போலீசிடம் சிக்கிய 4 பேர்!

Follow Us