Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Udhayanidhi Stalin

Udhayanidhi Stalin

தமிழக அரசியல் வரலாற்றில் திமுக மிக முக்கிய இடத்தில் உள்ளது. கலைஞர் மு. கருணாநிதி தொடங்கிய திமுக இன்று அவரது மகன் ஸ்டாலின் தலைமையில் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்போது அரசியலில் பிரவேசித்து வருகிறார். திரைப்பட தயாரிப்பு, திரைப்பட நடிப்பு என ஆர்வம் காட்டி வந்த உதயநிதி 2018 முதல் தீவிர அரசியலில் களமிறங்கினார். நாடாளுமன்ற தேர்தல்கள், சட்டமன்ற தேர்தல்களில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். பின்னர் 2019ல் திமுக இளைஞர் அணிச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு திருவல்லிக்கேனி எம். எல்.ஏ. ஆனார். பின்னர் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் ஆனார் உதயநிதி. இவர் கிருத்திகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

Read More

மதுரையில் உலகத் தரத்திலான சர்வதேச ஹாக்கி மைதானம் – திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்

New Hockey Arena : மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உலக தரத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஹாக்கி மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இங்கு நவம்பர் 28 முதல் டிசம்பர் 10, 2025 வரை உலக ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெறவுள்ளன.

தமிழ்நாட்டில் பிக்கிள் பால் ஊக்குவிக்கப்படும்.. உதயநிதி ஸ்டாலின் உறுதி..!

இந்திய பிக்கிள் பால் லீக் இன்று அதாவது 2025 நவம்பர் 18ம் தேதி சென்னையில் தொடக்க சீசனுக்கான முதல் ஐந்து உரிமையாளர்களை வெளியிட்டது. இதி,ல், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் பிக்கிள் பால் விளையாட்டை வளர்க்கும் நோக்கில், சென்னை மற்றும் மாநிலம் முழுவதும் பிரத்யேக பிக்கிள் பால் மைதானங்களை அமைக்கும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது” என்றார்.

ரீல்ஸ் என்பது வாழ்க்கை அல்ல.. கல்வி தான் ரியல் வாழ்க்கை – மாணவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அட்வைஸ்..

Deputy CM Udhayanidhi Stalin: Instagram, YouTube போன்ற சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. ரீல்ஸ் வாழ்க்கை இல்லை; அதில் வருவது பெரும்பாலும் பொய்யான வாழ்க்கையே. மாணவர்கள் இதில் நேரம் கழிப்பதை விட்டு, ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபட வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை.. கொடியசைத்து தொடங்கி வைத்த உதயநிதி!

ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை கோப்பை வருகின்ற 2025 நவம்பர் 28 முதல் 2025 டிசம்பர் 10 வரை சென்னை மற்றும் மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கோப்பைக்கான சுற்றுப்பயணத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் FIH தலைவர் டத்தோ தயப் இக்ராம் ஆகியோர் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

2000 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டம்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

Deputy CM Udhayanidhi Stalin: 2025 மற்றும் 2026ஆம் நிதியாண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், 70 வயது பூர்த்தி அடைந்த ஆன்மீக ஈடுபாடு உள்ள தம்பதிகளில் இருந்து, ஒவ்வொரு இணை ஆணையர் மண்டலத்திலும் 100 தம்பதிகள் சிறப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

விடுபட்ட அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1,000: உதயநிதி ஸ்டாலின் கொடுத்த சூப்பர் அப்டேட்!!

Magalir urimai thogai: ரேஷன் அட்டையில் உள்ள நபர்களில் யாரேனும் ஒருவர் வருமான வரி செலுத்தினால் அந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிமைத் தொகை கிடையாது. விடுப்பட்ட மீதமுள்ள அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 கிடைக்க செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை.. களத்தில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..

Deputy CM Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துரைப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார். மழைநீர் தேங்கினால் அதை வெளியேற்றுவதற்கான திட்டங்கள், அவை எவ்வாறு செயல்படுகின்றன, வடிகால் வசதி போதுமானதா என்பதனை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

புதிய விண்ணப்பதாரர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை எப்போது? உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

Magalir Urimai Thogai : சட்டப்பேரவையில் கூட்டத் தொடரில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், புதிய விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை டிசம்பர் 15, 2025 முதல் வழங்கப்படும் என அறிவித்தார். தற்போது இதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொகுதியிலும் மினி ஸ்டேடியம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Sports Infrastructure Boost: முதல்வர் கோப்பை நிறைவு விழா அக்டோபர் 14, 2025 அன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்றார்.

சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் இன்பநிதி.. இயக்குநர் இவரா?

Inbanithi Hero Debut: தமிழில் சினிமாவில் ஆரம்பத்தில் நடிகராக நடித்து தற்போது, தமிழக துணை முதலமைச்சராக இருந்துவருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் மகன் இன்பநிதி சினிமாவில் கால் பதிக்கவுள்ளார். இவர் நடிகராக அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

‘கை நம்மைவிட்டு போகாது’ காங்கிரஸ் – தவெக கூட்டணி? உதயநிதி ஸ்டாலின் பளீச்!

Udhayanidhi Stalin On Congress : கை நம்மை விட்டு போகாது என்று காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சூசகமாக தெரிவித்துள்ளார். தவெக - காங்கிரஸ் கூட்டணி அமையும் என தகவல்கள் கசிந்த வண்ணம் இருக்கும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

டாக்டர் ராமதாஸை நலம் விசாரித்த உதயநிதி ஸ்டாலின், துரை வைகோ!

சென்னை கிரிம்ஸ் சாலையில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நல குறைவால் கடந்த 2 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் ராமதாஸை மதிமுக துரை வைகோ, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.

தமிழ்நாட்டுக்கே பெருமை… இதற்காக நடிகர் அஜித் குமாருக்கு நன்றி…. உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

Ajith Kumar : நடிகர் அஜித் குமாரின் அஜித் குமார் ரேசிங் அணி ஸ்பெயினில் நடைபெற்ற 24 மணி நேர கார் ரேசில் 3வது இடத்தை பிடித்து இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

’சனிக்கிழமை மட்டும் வெளியே வருபவன் அல்ல’ விஜயை சீண்டும் உதயநிதி ஸ்டாலின்!

Udhayanidhi Stalin : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை மறைமுகமாக விமர்சித்துள்ளார். விஜயின் பெயரை குறிப்பிடடால், அவரை விமர்சித்துள்ளார். வெறும் சனிக்கிழமை மட்டும் வெளியே வரும் ஆள் நான் இல்லை என குறிப்பிட்டார்.

காலை உணவு திட்டம்… மாணவர்களின் உடல்நிலை பாதிப்பு 70% குறைவு – முதல்வருக்கு மருத்துவர் அருண் குமார் நன்றி

Dr Arunkumar Praises Breakfast Scheme: தமிழ்நாடு கல்வியில் அடைந்துள்ள சாதனைகளை சிறப்பிக்கும் வகையில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் குறித்து மருத்துவர் அருண் குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.