தமிழக அரசின் திரைப்பட விருது வழங்கும் விழா – விருதுகள் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்
State Film Awards : கடந்த 2016 முதல் 2022 ஆண்டுகளுக்கான தமிழக அரசின் சிறந்த திரைப்பட, சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா பிப்ரவரி 13, 2026 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. விழாவில் சிறந்த கலைஞர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விருது வழங்கினார்.
சென்னை, பிப்ரவரி 13 : சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக அரசின் திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளாக அறிவிக்கப்படாமல் இருந்த விருதுகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) உத்தரவின் பெயரில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன் படி 2016 முதல் 2022 ஆகிய காலகட்டங்களுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் 2014 முதல் 2022 வரையிலான காலகட்டத்திற்கான சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விருதுகளை வழங்கி கலைஞர்களை கௌரவித்தார். முன்னதாக கடந்த 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கான விருதுகள் அடையாறு முத்தமிழ் பேரவையில் முதல்வரால் வழங்கப்பட்டிருந்தன.
தற்போது 2016 முதல் 2022 வரையிலான திரைப்பட விருதுகள், 2014 முதல் 2022 வரையிலான சின்னத்திரை விருதுகள் மற்றும் 2015-16 முதல் 2021-22 வரையிலான மாணவர் விருதுகள் தேர்வு செய்யப்பட்டு அரசு உத்தரவும் வெளியிடப்பட்டுள்ளது.




இதையும் படிக்க : “மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000″ஆக உயர்த்தி வழங்கப்படும்.. முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி!!
சிறந்த நடிகர், நடிகைகள்
திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகர்களாக விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர். பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதே போல சிறந்த நடிகைகள் பிரிவில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியர், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், சாய் பல்லவி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
திரைப்பட விருது வழங்கும் விழா
தமிழ்நாடு அரசு சார்பில் திரைப்படம் மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கான விருதுகளை மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார்!#ஸ்டாலின்_தொடரட்டும் pic.twitter.com/En9c2nCpiK
— DMK (@arivalayam) February 13, 2026
மேலும் 2016 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் சிறந்த திரைப்படங்கள் என்ற பிரிவில் மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்க்கி ஆகிய படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இதையும் படிக்க : மகளிர் உரிமைத் தொகை.. “வங்கிக் கணக்கில் ரூ.5,000 வரவு”.. காலையிலேயே சர்ப்ரைஸ் தந்த முதல்வர் ஸ்டாலின்!!
சின்னத்திரை பிரிவில் எம்.ராஜ்குமார், ஆர்.பாண்டியராஜன், கௌஷிக், கிருஷ்ணா, தலைவாசல் விஜய், சஞ்சீவ், ஜெய் ஆகாஷ், கார்த்திக் ராஜ் ஆகியோர் சிறந்த நடிகர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் ராதிகா சரத்குமார், வாணி போஜன், நீலிமா ராணி, சங்கவி, ரேவதி, ரேஷ்மா, ஷபானா ஷாஜகான், சைத்ரா உள்ளிட்டோர் சிறந்த நடிகைகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் அழகி, ரோமாபுரி பாண்டியன், ராமானுஜர், நந்தினி, பூவே பூச்சூடவா, செம்பருத்தி, ராசாத்தி, சுந்தரி, எதிர் நீச்சல் ஆகிய தொடர்கள் சிறந்த தொடர்களாக தேர்வு செய்யப்பட்டன.
பரிசுத்தொகை
சிறந்த படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், இரண்டாம் பரிசு ரூ. 1 லட்சமும் வழங்கப்பட்டன. மேலும் பெண்களை நேர்மறையாக சித்தரித்துள்ள படங்களுக்கு ரூ.1.25 லட்சம் வழங்கப்படுகிறது. மேலும் சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஒரு பவுன் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டன. கடந்த சில ஆண்டுகளாக விருதுகள் வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது வழங்கப்பட்டிருப்பது கலைஞர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.