Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000″ஆக உயர்த்தி வழங்கப்படும்.. முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி!!

Magalir urimai thogai will be increased as Rs2000: வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள் தான் வெல்வோம். அடுத்த திராவிட மாடல் ஆட்சி 2.0 ஆட்சிக்காலத்தில், ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை ரூ.2,000ஆக உயர்த்தி வழங்குவோம். இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி என்று அவர் அறிவித்துள்ளார்.

“மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000″ஆக உயர்த்தி வழங்கப்படும்.. முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி!!
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 13 Feb 2026 10:31 AM IST

சென்னை, பிப்ரவரி 13: தமிழ்நாடு பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம். திராவிட மாடல் 2.0ல் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,000ஆக உயர்த்தி வழங்குவோம் என முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி வழங்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அந்த அறிவிப்பில், தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன் என்று கூறியுள்ளார். அதோடு, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இன்று காலை ரூ.5000 பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து பெண்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

இதையும் படிக்க: மகளிர் உரிமைத் தொகை.. “வங்கிக் கணக்கில் ரூ.5,000 வரவு”.. காலையிலேயே சர்ப்ரைஸ் தந்த முதல்வர் ஸ்டாலின்!!

வங்கிக் கணக்கில் பணம் வரவு வைப்பு:

அதன்படி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3,000ம், கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000ம் என மொத்தம் ரூ.5,000 வழங்கப்படுள்ளது. 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை காரணம் காட்டி, அடுத்த 3 மாதத்திற்கு மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த சதி செய்வதாக தகவல் வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர சிலர் முயற்சி செய்கிறார்கள். இந்த திட்டத்தை 3 மாதம் நிறுத்தி வைத்தால் பெண்களுக்கு எவ்வளவு சிரமம் என்பதை அறிவேன். எனவே தான் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3,000, கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 சேர்த்து ரூ.5000ஆக வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ரூ.2,000ஆக உயர்த்தி வழங்குவோம்:

குறிப்பாக, அந்த வீடியோவில் அவர், வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள் தான் வெல்வோம். அடுத்த திராவிட மாடல் ஆட்சி 2.0 ஆட்சிக்காலத்தில், ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை ரூ.2,000ஆக உயர்த்தி வழங்குவோம். இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி என்று அவர் அறிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை:

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக, மகளிர் மேம்பாட்டிற்காக அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது. தொடர்ந்து ஆட்சிக்கு வந்த திமுக, 2023ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கியது. அதன்படி, ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. எனினும், தொடக்கத்தில் தகுதியுடைய பெண்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும் எனக்கூறி லட்சக்கணக்கான பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இதையும் படிக்க : கூட்டணி ஆட்சி கதவை அடைத்த ஸ்டாலின்…ரகசியம் வைத்துள்ள செல்வப்பெருந்தகை..காங்கிரஸுக்கு இருக்கும் 2 சாய்ஸ்!

விடுப்பட்ட பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை:

தொடர்ந்து, விடுப்பட்டவர்கள் மற்றும் தகுதி வாய்ந்த பயனர்களை கண்டறிந்து உரிமைத் தொகை வழங்கப்படும் என அக்கட்சியினர் உறுதி அளித்து வந்தனர். எனினும், அப்படியும் பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதால், பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பலை எழுந்தது. இந்நிலையில், தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் 2026 சட்டமன்றத் தேர்தல் வர உள்ளது. இந்த சமயத்தில் பெண்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பலை, தேர்தல் முடிவுகளை பாதிக்கக்கூடும் என்று எண்ணிய அக்கட்சி சில விதிகளை தளர்த்தி சிறப்பு முகாம்களை நடத்தி, கடந்த டிசம்பர் மாதம் விடுப்பட்ட பெண்களை சேர்த்தது.  அதில், புதிதாக சுமார் 17 லட்சம் பெண்கள் சேர்க்கப்பட்டனர், இதனால் மொத்த பயனாளிகள் எண்ணிக்கை 1.34 கோடியாக உயர்ந்துள்ளது.