AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs ENG: க்ரீஸுக்கு சைடில் வைத்தாலும் நோ பால்.. ரவி பிஷ்னோய் செய்த தவறு என்ன..? ஐசிசி விதி கூறுவது என்ன?

Ravi Bishnoi 2 No balls: ஒரு பந்துவீச்சாளரின் முன்கால் கிரீஸுக்கு வெளியே தரையிறங்கும்போது, ​​அந்தப் பந்து நோ-பால் என அறிவிக்கப்படு. அதன்பிறகு, வீசப்படும் பந்து ஒரு ஃப்ரீ ஹிட்டாக அறிவிக்கப்பட்டு, அந்த பந்தில் விக்கெட் வீழ்ந்தால், விக்கெட்டாக கருதப்படாது. அதேபோல், ஒரு பந்துவீச்சாளரின் கால் கிரீஸின் பக்கக் கோட்டிற்கு வெளியே கால்களை கொண்டு சென்று பந்துவீசினால், அது பேக்ஃபூட் நோ-பால் என்று அழைக்கப்படுகிறது.

IND vs ENG: க்ரீஸுக்கு சைடில் வைத்தாலும் நோ பால்.. ரவி பிஷ்னோய் செய்த தவறு என்ன..? ஐசிசி விதி கூறுவது என்ன?
ரவி பிஷ்னோய் நோ பால்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 05 Jul 2026 17:51 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் (Ind vs Eng 2nd T20) இந்திய அணியின் தோல்விக்கு சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் ஒரு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறார். 17வது ஓவரில் 29 ரன்களை விட்டுக்கொடுத்து, பிஷ்னோய் போட்டியின் போக்கையே மாற்றினார், இது இந்திய அணியை தோல்வி பாதைக்கு அழைத்து சென்றது. இந்திய அணியின் பந்துவீச்சின்போது ரவி பிஷ்னோய் (Ravi Bishnoi) 2 பின் கால் நோ-பால்களை வீசினார். இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோயின் கால் கோட்டைத் தாண்டாத இந்த நோ-பால்கள், நோ-பால்களாகவே அறிவிக்கப்பட்டன. எனவே, இந்திய அணியின் தோல்விக்கு வழிவகுத்த இந்த நோ-பால் தொடர்பான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) விதிகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்.

ALSO READ: இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட்.. இந்திய அணியின் தோல்விக்கு இந்த 5 தவறுகளே காரணம்!

பின் கால் நோ-பால், ஐசிசி விதி என்ன சொல்கிறது?


ஒரு பந்துவீச்சாளரின் முன்கால் கிரீஸுக்கு வெளியே தரையிறங்கும்போது, ​​அந்தப் பந்து நோ-பால் என அறிவிக்கப்படு. அதன்பிறகு, வீசப்படும் பந்து ஒரு ஃப்ரீ ஹிட்டாக அறிவிக்கப்பட்டு, அந்த பந்தில் விக்கெட் வீழ்ந்தால், விக்கெட்டாக கருதப்படாது. அதேபோல், ஒரு பந்துவீச்சாளரின் கால் கிரீஸின் பக்கக் கோட்டிற்கு வெளியே கால்களை கொண்டு சென்று பந்துவீசினால், அது பேக்ஃபூட் நோ-பால் என்று அழைக்கப்படுகிறது.

பிஷ்னோய் வீசும் கோணம் உள்பட சில காரணத்தினால், இத்தகைய பந்துவீச்சாளர்களுக்குப் பின்கால் நோ-பால் ஒரு பிரச்சனையாக அமையலாம். இருப்பினும், சுழற்பந்து வீச்சாளர்களிடமிருந்து பின்கால் நோ-பால்கள் அரிதாகவே வீசப்படும். வேகப்பந்து வீச்சாளர்கள் எப்போதாவது பின்கால் நோ-பால்களை வீசுகிறார்கள். ஐசிசி விதிகளின்படி, மற்ற நோ-பால்களுக்கு ஒரு பேட்ஸ்மேன் ஃப்ரீ ஹிட் பெறுவதைப் போலவே, பேக்ஃபூட் நோ-பாலுக்கும் அவருக்கு ஃப்ரீ ஹிட் உண்டு. இந்தப் போட்டியில் பிஷ்னோய் 3 பேக்ஃபூட் நோ-பால்களை வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: இந்திய அணியின் தோல்விக்கு காரணம் யார்..? ஷ்ரேயாஸ் ஐயர் ஓபன் டாக்!

ஆட்டத்தின் போக்கையே மாற்றிய பிஷ்னோயின் நோ பால்:

கடைசி 4 ஓவர்களில் இங்கிலாந்து வெற்றி பெற 49 ரன்கள் தேவைப்பட்டன. 17வது ஓவரை வீச வந்த ரவி பிஷ்னோய், 29 ரன்களை விட்டுக்கொடுத்தார். அதன்பிறகு, இங்கிலாந்து அணிக்கு 3 ஓவர்களில் 20 ரன்கள் தேவைப்பட்டன. அந்த அணி வெறும் 2 ஓவர்களில் 20 ரன்கள் எடுத்து, 19 ஓவர்களில் போட்டியை வென்றது. பிஷ்னோயின் அந்த ஓவர் இந்திய அணியின் தோல்விக்கு வழிவகுத்தது.

Follow Us