பிக்பாஸில் இந்த வாரம் ஃபேமிலி வீக்… எமோஷ்னலான போட்டியாளர்கள் – வைரலாகும் வீடியோ!
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து 11 வாரங்கள் முடிவடைந்து தற்போது 12-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஃபேமிலி வாரம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் கடந்த 2026-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 06-ம் தேதி தொடங்கி தற்போது ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10). இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் நிலையில் மொத்தம் 24 போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டனர். அந்த 24 போட்டியாளர்களில் 5 போட்டியாளர்கள் காமென் மேன் நிகழ்ச்சியில் இருந்து இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாளர்களாக வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாரம் வாரம் ஒருவர் என்ற விகிதத்தில் எவிக்ஷன் நடைப்பெற்று வந்த நிலையில் கடந்த 3 வாரங்களாக பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் டபுள் எவிக்ஷன் என்ற முறையில் வாரம் வாரம் இரண்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் உள்ளனர்.
தொடர்ந்து 11 வாரங்கள் முடிவடைந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தற்போது 12-வது வாரத்தை எட்டியுள்ளது. அதாவது இன்றுடன் 77 நாட்களை முடிவடைந்து 78-வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஃபேமிலி வாரமாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




பிக்பாஸில் இந்த வாரம் ஃபேமிலி வீக்… எமோஷ்னலான போட்டியாளர்கள்:
அதன்படி இன்று 78-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் வீட்டில் உள்ள 8 போட்டியாளர்களின் குடும்பத்தில் இருந்து ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் வழங்கப்படுகின்றது. அந்த டாஸ்கில் வெற்றிப் பெறும் 4 போட்டியாளர்களுக்கு மட்டுமே கடிதம் வழங்கப்படும் தோல்வியை சந்திக்கும் போட்டியாளர்களுக்கு கடிதம் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் யாருக்கு எல்லாம் கடிதம் கிடைக்கும் யாருக்கு கடிதம் கிடைக்காது என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… பிக்பாஸில் நா தொலைஞ்சா போதுனு நினைக்கிறது இவங்கதான்… போட்டியாளர்களின் கலகல பேச்சு!
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
#Day78 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/xx8X61PN6F
— Vijay Television (@vijaytelevision) November 23, 2026
Also Read… ரிலீஸ் தேதியை முடிவு செய்தது மோகன்லாலின் அதிமனோகரம் படம்!