படப்பிடிப்பை நிறைவு செய்தது விக்ரம் பிரபுவின் சிட்டி ஆஃப் கோல்ட் படக்குழு – வைரலாகும் வீடியோ!
City Of Gold Movie Shooting Wrapped | நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் தமிழ் சினிமாவில் தற்போது உருவாகி உள்ள படம் சிட்டி ஆஃப் கோல்ட். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விக்ரம் பிரபு (Vikram Prabhu). தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேஷனின் பேரனாகவும், நடிகர் பிரபுவின் மகனாகவும் நடிப்பு துறைக்கு எண்ட்ரி கொடுத்தார் விக்ரம் பிரபு. இவர் நாயகனாக அறிமுகம் ஆனதில் இருந்தே தொடர்ந்து ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெறும் படங்களை ஏற்று நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகும் படங்களின் கதை மிகவும் சிறந்ததாக இருக்கிறது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் சிறை. உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவின் நடிப்பு ரசிகர்களிடையே வெகுவாகப் பாராட்டப்பட்டது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் அடுத்ததாக உருவாகி உள்ள படம் சிட்டி ஆஃப் கோல். இந்தப் படத்தின் அறிமுக வீடியோ வெளியான போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.




படப்பிடிப்பை நிறைவு செய்தது சிட்டி ஆஃப் கோல்ட் படக்குழு:
தொடர்ந்து இந்த சிட்டி ஆஃப் கோல்ட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் சித்தார்த் எழுதி இயக்கி உள்ள நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ள நிலையில் படம் வருகின்ற 2027-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் ராகுல், ஷிவாத்மிகா ராஜசேகர் மற்றும் அமலா ஷாஜி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Also Read… மூன்று கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்தது தர்மன் படக்குழு – அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது?
நடிகர் விக்ரம் பிரபு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Step behind the scenes of #CityOfGold ✨
🔗https://t.co/8YCtgzeIEi
Romeo Pictures presents #VikramPrabhu26 @mynameisraahul @Romeopictures_
The young Maestro
@u1recordsoffl @thisisysr
Directed by
@just_sid_here
Starring
@iamVikramPrabhu
@mynameisraahul
@ShivathmikaR
@__amalashaji__— Vikram Prabhu (@iamVikramPrabhu) November 20, 2026
Also Read… ஒரே நாளில் தியேட்டரில் வெளியாகும் அப்பா – மகன் படம்… துல்கர் கொடுத்த ரியாக்ஷன்!