AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னை வரும் துணைக் குடியரசுத் தலைவர் ! இன்றும் நாளையும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் – எங்கெங்கு தெரியுமா?

Chennai Traffic Diversion: துணைக் குடியரசுத் தலைவரின் பயணத்தின்போது குறிப்பிட்ட வழித்தடங்களில் பூஜ்ஜிய போக்குவரத்து (Zero Traffic) நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இன்று (நவம்பர் 21) பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக மற்றும் வணிக வாகனங்களுக்குப் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் அமலில் இருக்கும்.

சென்னை வரும் துணைக் குடியரசுத் தலைவர் ! இன்றும் நாளையும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் – எங்கெங்கு தெரியுமா?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 21 Nov 2026 11:55 AM IST

நவம்பர் 21, 2026: இந்திய துணைக் குடியரசுத் தலைவர் சென்னைக்கு வருகை தர உள்ளதையொட்டி, சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்றும் நாளையும் (நவம்பர் 21, 22) போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கனரக மற்றும் வணிக வாகனங்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், துணைக் குடியரசுத் தலைவரின் பயணத்தின்போது குறிப்பிட்ட வழித்தடங்களில் பூஜ்ஜிய போக்குவரத்து (Zero Traffic) நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், எந்தெந்த பகுதிகளில் வாகனங்கள் திருப்பி விடப்படும் என்பது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நவம்பர் 21: பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து மாற்றம்!

இன்று (நவம்பர் 21) பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக மற்றும் வணிக வாகனங்களுக்குப் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் அமலில் இருக்கும்.

  • தாம்பரத்தில் இருந்து வரும் வாகனங்கள் திருநீர்மலை சந்திப்பில் திருப்பி விடப்பட்டு குன்றத்தூர் சாலை வழியாகச் செல்லலாம்.
  • பல்லாவரத்தில் இருந்து வரும் வாகனங்கள் பன்னாட்டு விமான நிலைய சந்திப்பு (ஹோட்டல் ஏர்வே) பகுதியில் திருப்பி விடப்பட்டு தாம்பரம் நோக்கிச் செல்லலாம்.
  • போரூரில் இருந்து வரும் வாகனங்கள் கத்திப்பாரா சந்திப்பில் திருப்பி விடப்பட்டு வடபழனி வழியாகச் செல்லலாம்.
  • அசோக் பில்லரில் இருந்து வரும் வாகனங்கள் சிபெட் (CIPET) சந்திப்பில் திருப்பி விடப்பட்டு கிண்டி தொழிற்பேட்டை நோக்கிச் செல்லலாம்.
  • அண்ணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் எம்.சி. ராஜா யு-டர்ன் பகுதியில் திருப்பி விடப்படும்.
  • அடையாறில் இருந்து வரும் வாகனங்கள் எல்.பி. சாலையில் திருப்பி விடப்படும்.
  • ஓ.எம்.ஆர். பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் எஸ்.ஆர்.பி. டூல்ஸ் பகுதியில் திருப்பி விடப்படும்.
  • இ.சி.ஆர். பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் அக்கரை சந்திப்பில் திருப்பி விடப்படும்.

மேலும் படிக்க: “வேகத்தை விடச் சிறப்பானது செயல்பாடு!”.. ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷுக்கு அமைச்சர் கீர்த்தனா பதிலடி!

நவம்பர் 22: காலை 8 மணி முதல் 10.30 மணி வரை போக்குவரத்து மாற்றம்!

நாளை (நவம்பர் 22) காலை 8 மணி முதல் 10.30 மணி வரை அடையாறு மற்றும் பாரிஸ் கார்னர் இடையிலான வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  • அடையாறில் இருந்து பாரிஸ் கார்னர் நோக்கிச் செல்லும் வாகனங்கள்: கிரீன்வேஸ் சந்திப்பில் திருப்பி விடப்படும். அங்கிருந்து கிரீன்வேஸ் சாலை, ஆர்.ஏ.புரம் 2-வது பிரதான சாலை சந்திப்பு, சேமியர்ஸ் சாலை, டி.டி.கே. சாலை, மியூசிக் அகாடமி சந்திப்பு, ஆர்.கே. சாலை மற்றும் அண்ணா சாலை வழியாகச் சென்று தங்களது இலக்கை அடையலாம்.
  • பாரிஸ் கார்னரில் இருந்து அடையாறு நோக்கிச் செல்லும் வாகனங்கள்: உழைப்பாளர் சிலை பகுதியில் திருப்பி விடப்படும். அங்கிருந்து வாலாஜா சாலை மற்றும் அண்ணா சாலை வழியாகச் சென்று தங்களது இலக்கை அடையலாம்.

பொதுமக்களுக்கு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல்

துணைக் குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி மேற்கொள்ளப்படும் இந்தத் தற்காலிக போக்குவரத்து மாற்றங்களைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். குறிப்பாக தாம்பரம், பல்லாவரம், கிண்டி, அடையாறு, ஓ.எம்.ஆர். மற்றும் இ.சி.ஆர். பகுதிகளில் பயணிப்பவர்கள் மாற்று வழித்தடங்களைப் பயன்படுத்துமாறும், போக்குவரத்து காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Follow Us