ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள்.. பட்டியல் தயாரிக்கும் தமிழ்நாடு அரசு.. உங்களுக்கு கிடைக்குமா?
Tamil Nadu 3 Free LPG Cylinders | ஆட்சி அமைத்தால் மூன்று இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என தவெக அறிவித்த நிலையில், தற்போது ஆட்சி அமைத்துள்ளதால் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதாவது, தகுதியான பயனர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு தயார் செய்து வருகிறது.
சென்னை, நவம்பர் 21 : தமிழகத்தில் (Tamil Nadu) தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு மூன்று இலவச கேஸ் சிலிண்டர்கள் (3 Free Gas Cylinders) வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான், ஆண்டுக்கு மூன்று இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்திற்கு பயனாளிகள் பட்டியலை தமிழ்நாடு அரசு தயாரித்து வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தேர்தல் வாக்குறுதியை பகுதியாக நிறைவேற்றிய தவெக அரசு
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தால் தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு மூன்று இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்துள்ள நிலையில் 6 கேஸ் சிலிண்டர்களுக்கு பதிலாக முதற்கட்டமாக மூன்று கேஸ் சிலிண்டர்களை வழங்க திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க : செஞ்சி சிறுமி மாயமாகி 40 நாட்கள்.. தீர்வு வேண்டி காவல் நிலையத்தில் சிறப்பு கணபதி ஹோமம் செய்த ஆய்வாளர்!
சட்டமன்றத்தில் அறிவித்த முதலமைச்சர் விஜய்
ஆண்டுக்கு 6 இலவச கேஸ் சிலிண்டர் திட்டத்தில் முதற்கட்டமாக 3 சிலிண்டர்கள் சுமார் 1.30 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்தார். இந்த நிலையில் தான், இந்த திட்டத்திற்கான பயனாளிகள் பட்டியலை தயாரிக்கும் பணிகளில் தமிழ்நாடு அரசு இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : மதுரை காவல் மரண வழக்கு.. காவல் நிலையங்களின் சிசிடிவி காட்சிகளை பார்க்க குடும்பத்தினருக்கு உயர் நீதிமன்றம் அனுமதி!
திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்கள் யார் யார்?
பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச கேஸ் இணைப்பு பெற்றவர்கள், மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 பெறுபவர்கள், ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் ஆண்டு வருமானம் பெறும் குடும்பங்கள் ஆகியவற்றுக்கு இந்த திட்டத்தின் கீழ் இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், தகுதியுள்ள பயனர்களை கண்டெடுக்கும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி சுமார் 2.40 கோடி குடும்பங்கள் சமையல் கேஸ் சிலிண்டர் இணைப்பை கொண்டுள்ளனர். இதில் ஒரு சிலிண்டர் வைத்துள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 1.10 கோடியாக உள்ளது. அவற்றின் 42 லட்சம் கேஸ் இணைப்புகள் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில். இவற்றில் தகுதியுள்ள பயனர்களை கண்டெடுக்கும் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.