AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold Price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. சென்னை ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

Chennai Gold Price: சென்னையில் நவம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.11,465 ஆகவும், ஒரு சவரன் ரூ.91,720 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.12,507 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,00,056 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Gold Price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. சென்னை ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 21 Nov 2026 10:36 AM IST

நவம்பர் 21, 2026: சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் நிலையில், நவம்பர் 21ஆம் தேதியான இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு சுமார் ரூ.3,000 வரை சரிந்த நிலையில், இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.45 குறைந்துள்ளது. இதனால் சவரனுக்கு ரூ.360 விலை குறைந்துள்ளது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு இந்த விலை சரிவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்!

சென்னையில் நவம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.11,465 ஆகவும், ஒரு சவரன் ரூ.91,720 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.12,507 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,00,056 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: இனி பிஎஃப் கணக்கில் 10% மட்டும் பணம் இருந்தால் போதும்.. பணம் எடுக்கும் முறையில் அதிரடி மாற்றம்.. இனி கையில் அதிக பணம் இருக்கும்!

வெள்ளி விலையைப் பொறுத்தவரையில், கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு கிராம் ரூ.400-ஐக் கடந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது கணிசமாகக் குறைந்துள்ளது. நவம்பர் 21ஆம் தேதி வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.175-க்கும், ஒரு கிலோ ரூ.1.75 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தில் முதலீடு செய்வது லாபகரமானதா?

தங்கம் என்பது பாரம்பரியமாகவே இந்திய மக்களின் முக்கியமான முதலீட்டுத் தேர்வுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. குறிப்பாக பொருளாதார நிச்சயமற்ற சூழல், பணவீக்கம் மற்றும் சர்வதேச சந்தைகளில் ஏற்படும் மாற்றங்களின்போது தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பது வழக்கம்.

மேலும் படிக்க: 25 நாட்களில் 52 லட்சம் திருமணங்களை எதிர்க்கொள்ளும் இந்தியா.. ரூ.1.52 லட்சம் கோடி வர்த்தகம் எதிர்ப்பார்ப்பு!

தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் ஆபரண நகைகள் மட்டுமின்றி, தங்க நாணயங்கள், தங்கக் கட்டிகள், தங்கப் பத்திரங்கள், தங்கப் பரிவர்த்தனை நிதிகள் மற்றும் டிஜிட்டல் தங்கம் போன்ற வழிகளையும் தேர்வு செய்யலாம்.

  • தங்க நகைகள்: அணிவதற்கும், எதிர்காலத் தேவைகளுக்கும் பயன்படும். ஆனால் செய்கூலி, சேதாரம் மற்றும் விற்பனைக்கான கழிவுகளைக் கவனிக்க வேண்டும்.
  • தங்க நாணயங்கள்: முதலீட்டு நோக்கில் வாங்கும்போது தூய்மைச் சான்று மற்றும் மறுவிற்பனை நிபந்தனைகளைச் சரிபார்க்க வேண்டும்.
  • Gold ETF: பங்குச் சந்தை வாயிலாகத் தங்கத்தில் முதலீடு செய்யும் வசதி. இதற்கு டீமேட் கணக்கு தேவை.
  • தங்கப் பத்திரங்கள்: அரசின் பழைய தங்கப் பத்திரங்கள் (Sovereign Gold Bonds) முதிர்வு காலம், வட்டி மற்றும் விற்பனை விதிமுறைகளுக்கு உட்பட்டு முதலீட்டு வாய்ப்பை வழங்குகின்றன. புதிய வெளியீடுகள் கிடைப்பது குறித்து தனியாகச் சரிபார்க்க வேண்டும்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை, தற்போது சரிவைச் சந்தித்து வருவது நகை வாங்குவோர் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும், தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு தங்களது நிதிநிலை, முதலீட்டு காலம் மற்றும் இடர் தாங்கும் திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொள்வது அவசியம்.

Follow Us