இனி பிஎஃப் கணக்கில் 10% மட்டும் பணம் இருந்தால் போதும்.. பணம் எடுக்கும் முறையில் அதிரடி மாற்றம்.. இனி கையில் அதிக பணம் இருக்கும்!
EPFO Lowers Mandatory Reserve to 10 Percentage | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில், பயனர்கள் தங்களது பிஎஃப் பணத்தை எடுக்கும்போது வைக்க வேண்டிய குறைந்தபட்ச தொகையின் அளவு உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 25-ல் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் தங்களது பிஎஃப் (PF – Provident Fund) பணத்தை விரைவாகவும், எளிதாகவும் எடுத்துக்கொள்ள வழிவகை செய்யும் விதமாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தான் சமீபத்தில் யுபிஐ (UPI – Unified Payment Interface) மற்றும் ஏடிஎம் (ATM – Automated Teller Machine) மூலம் பிஎஃப் பணத்தை எடுக்க ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் 3.0 அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான பணிகளை தொடங்கியது. அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, ஊழியர்கள் தங்களது பிஎஃப் கணக்கில் இருந்து எடுக்கும் பணத்தின் அளவில் முக்கிய மாற்றம் செய்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இபிஎஃப்ஓவில் வரும் இரண்டு முக்கிய மாற்றங்கள்
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் மத்திய அரங்காவலர் குழு கூட்டம் நேற்று (நவம்பர் 19, 2026) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை ஊழியர்கள் எடுத்து பயன்படுத்துவது தொடர்பான முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் இரண்டு முக்கிய மாற்றங்களை கொண்டு வருவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 10 நாட்களில் ரூ.9,000 குறைந்த தங்கம் விலை.. காரணம் இதுதான்.. இனியும் குறையுமா?
கட்டாய இருப்பு தொகை 10 சதவீதமாக குறைப்பு
ஊழியர்கள் தங்களது அவசர தேவைகளுக்காக பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதி உள்ளது. அவ்வாறு, ஊழியர்கள் பிஎஃப் பணத்தை எடுக்கும்போது அவர்கள் கட்டாய இருப்பு தொகையாக 25 சதவீத பணத்தை வைக்க வேண்டும். உதாரணமாக ஒருவரது பிஎஃப் கணக்கில் ரூ.1 லட்சம் பணம் உள்ளது என்றால் அவர் 25 சதவீதம் பணம் அதாவது, ரூ.25,000-த்தை பிஎஃப் கணக்கிலேயே விட்டுவிட்டு மீதமுள்ள ரூ,75,000 பணத்தை மட்டுமே எடுக்க முடியும்.
இதையும் படிங்க : இனி ஓய்வுக்கு பிறகும் வட்டி.. பிஎஃப் பணத்தை எடுக்கும் முறையில் முக்கிய மாற்றம்!
இனி ஊழியர்களின் கைகளில் அதிக பணம் கிடைக்கும்
இந்த விதிமுறை இனி மாறுகிறது. அதாவது, இனி ஊழியர்கள் தங்களது பிஎஃப் கணக்கில் 10 சதவீதம் பணத்தை வைத்தால் மட்டுமே போதுமானது என விதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஒருவரது பிஎஃப் கணக்கில் ரூ.1 லட்சம் பணம் உள்ளது என்றால் அவர் 10 சதவீத தொகையான ரூ.10,000-த்தை கணக்கில் வைத்துவிட்டு மீதமுள்ள ரூ.90,000 பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் ஊழியர்களிம் கையில் கிடைக்கும் பணம் அதிகமாக இருக்கும்.