AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

என் வாழ்வின் காதலை.. தனது திருமண புகைப்படங்களை பகிர்ந்த அஸ்வின் குமார்!

Ashwin Kumar Marriage Photos: தமிழில் சின்னத்திரை சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவராக இடம்பிடித்தவர் அஸ்வின் குமார். இவர் குக் வித் கோமாளி சீசன் 2ல் போட்டியாளராக களமிறங்கினார். இவர் இன்று (20/11/2026) இயக்குநர் ராஜசேகரின் பேத்தி புவனேஸ்வரியை திருமணம் செய்துகொண்டுள்ள நிலையில், அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Barath Murugan
Barath Murugan | Published: 20 Nov 2026 15:43 PM IST
விஜய் டிவியில் 2013ம் ஆண்டில் ஒளிபரப்பான ஆபிஸ் என்ற சீரியலின் மூலம் சின்னத்திரையில் நுழைந்தவர் அஸ்வின் குமார். இதன் பிறகு 2015ல் வெளியான ரெட்டைவால் குருவி என்ற சீரியலின் மூலமாக நடிகராக அறிமுகமானார். இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் நெருக்கமானார்.

1 / 5
இவ்வாறு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிபரப்பாகிய சீரியல்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவ்வாறு சீரியல் நடிகராக இருந்த இவர், இயக்குநர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் ஓ காதல் கண்மணி என்ற படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்து சினிமாவிலும் நுழைந்தார்.

2 / 5
இவர் சினிமாவில் 2022ம் ஆண்டில் வெளியான என்ன சொல்ல போகிறாய் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதற்கு பின் செம்பி என்ற படத்திலும் நடித்திருந்தார். இறுதியாக இவரின் நடிப்பில் தமிழில் ஹாட் ஸ்பாட் 2 மச் படமானது வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது.

3 / 5
அந்த விதத்தில் இன்று (20/11/2026) நடிகர் அஸ்வின் குமார், புவனேஸ்வரி என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்கள் இருவரின் திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கோவையில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்துமுடிந்துள்ளது.

4 / 5
நடிகர் அஷ்வின் திருமணம் செய்துள்ள புவனேஸ்வரி என்பவர், மறைந்த பழம்பெரும் இயக்குநரும், நடிகருமான ராஜசேகரின் பேத்தியாம். இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும் தற்போது அஸ்வின் பகிர்ந்துள்ள திருமண புகைப்படங்களும் ரசிகர்களிடையே வரவேற்கப்பட்டுவருகிறது.

5 / 5
Follow Us