AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

டிரான்ஸ்ஃபர்மேஷன் சீக்ரெட்… கீர்த்தி சுரேஷின் டயட் ரகசியம் இதுதான்!

Keerthy Suresh Weight Loss: உடல் எடையைக் குறைத்து ஃபிட்டான தோற்றத்திற்கு மாறிய நடிகை கீர்த்தி சுரேஷின் உணவுப் பழக்கம் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிக புரதச்சத்து கொண்ட உணவுகள், யோகா மற்றும் உடற்பயிற்சி என அவர் பின்பற்றிய ஆரோக்கியமான அணுகுமுறை குறித்து பார்க்கலாம்.

டிரான்ஸ்ஃபர்மேஷன் சீக்ரெட்… கீர்த்தி சுரேஷின் டயட் ரகசியம் இதுதான்!
கீர்த்தி சுரேஷ்Image Source: Instagram
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 20 Nov 2026 16:00 PM IST

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையை சுமார் 8 முதல் 9 கிலோ வரை குறைத்துள்ளார். இதற்காக அதிக புரதச்சத்து மற்றும் குறைவான கார்போஹைட்ரேட் (Keerthy Suresh Weight Loss) கொண்ட உணவுகளைத் தேர்ந்தெடுத்துள்ளார். தினமும் 6 முதல் 7 முட்டையின் வெள்ளைக்கருவைச் சாப்பிடுவதாகத் தெரிவித்துள்ளார். பனீர், டோஃபு, சோயா மற்றும் பருப்பு வகைகளையும் உணவில் சேர்த்துக் கொள்கிறார். கொரோனா காலத்தில் யோகா பயிற்சியைத் தொடங்கி உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தியுள்ளார். ஸ்ட்ரெங்த் டிரெயினிங் பயிற்சிகள் மூலம் தசைகளை வலுப்படுத்தி வருகிறார். பிடித்த உணவுகளை முற்றிலும் தவிர்க்காமல் சமநிலையான உணவுப் பழக்கத்தையும் உடற்பயிற்சியையும் பின்பற்றுவதே அவரது ஃபிட்னஸ் ரகசியமாகும்.

Also Read: 10 கிலோ எடையைக் குறைத்து வியக்க வைத்த நடிகை ரம்யா சுப்பிரமணியன்!

9 கிலோ வரை குறைத்த கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த 2018-19ஆம் ஆண்டுகளில் தனது உடல் எடையை சுமார் 8 முதல் 9 கிலோ வரை குறைத்ததாக தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் தீவிரமான கார்டியோ பயிற்சிகளை மட்டுமே மேற்கொண்டதாகவும், அதன் மூலம் வேகமாக உடல் எடை குறைந்ததாகவும் கூறியுள்ளார். இருப்பினும், அதிகப்படியான கார்டியோ காரணமாக உடலில் தசைகளும் குறைந்ததை பின்னர் உணர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புரதச்சத்து நிறைந்த உணவுகளுக்கு முக்கியத்துவம்!

உடல் எடையைக் குறைப்பதற்காக கடுமையான கிராஷ் டயட் முறைகளைப் பின்பற்றவில்லை என்று கீர்த்தி தெரிவித்துள்ளார். அதற்குப் பதிலாக அதிக புரதச்சத்து மற்றும் குறைவான கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளைத் தனது உணவுப் பழக்கத்தில் சேர்த்துள்ளார். குறிப்பாக முட்டையின் வெள்ளைக்கரு, பனீர், டோஃபு, சோயா மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதாகக் கூறியுள்ளார்.

தினமும் 6 முதல் 7 முட்டையின் வெள்ளைக்கரு!

தனது உணவுப் பழக்கம் குறித்து பேசிய கீர்த்தி, தினமும் சுமார் 6 முதல் 7 முட்டையின் வெள்ளைக்கருவைச் சாப்பிடுவதாக தெரிவித்துள்ளார். மேலும், புரதச்சத்துக்காகப் பனீர், டோஃபு, சோயா மற்றும் பல்வேறு பருப்பு வகைகளையும் உணவில் சேர்த்துக் கொள்கிறார். புரதச்சத்து பெறுவதற்காகத் தனியாக புரோட்டீன் ஷேக்குகளைக்கூட பயன்படுத்துவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யோகா மற்றும் ஸ்ட்ரெங்த் டிரெயினிங்!

கொரோனா காலகட்டத்தில் யோகா பயிற்சியைத் தொடங்கிய பிறகு உடலிலும் மனதிலும் நல்ல மாற்றங்களை உணர்ந்ததாக கீர்த்தி தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்ட்ரெங்த் டிரெயினிங் எனப்படும் தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். உடல் எடையைக் குறைப்பது மட்டுமின்றி, உடலின் வலிமையையும் பராமரிப்பது முக்கியம் என்பதைத் தனது அனுபவத்தின் மூலம் உணர்ந்ததாகக் கூறியுள்ளார்.

Also Read: 10 கிலோ எடையைக் குறைத்து வியக்க வைத்த நடிகை ரம்யா சுப்பிரமணியன்!

பிடித்த உணவுகளைத் தவிர்ப்பதில்லை!

உடல் ஆரோக்கியத்திற்காகப் பிடித்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை என்பது கீர்த்தியின் அணுகுமுறை. தனக்குப் பிடித்த உணவுகளைச் சாப்பிட விரும்பும்போது சாப்பிடுவதாகவும், உணவின் மீது தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கடுமையான உணவுக் கட்டுப்பாடுகள் இல்லாமல் சமநிலையான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்.

Follow Us