AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சோலார் பேனல் வைப்பவர்களுக்கு குட்நியூஸ்.. கட்டண விலக்கு வழங்க முடிவு – வெளியான தகவல்

Tamil Nadu Solar Subsidy : வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம்  அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில், விண்ணப்பக் கட்டணம், மின் இணைப்பு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்க மின் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சோலார் பேனல் வைப்பவர்களுக்கு குட்நியூஸ்.. கட்டண விலக்கு வழங்க முடிவு – வெளியான தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 20 Nov 2026 16:04 PM IST

சென்னை, நவம்பர் 20 : வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம்  (Solar Panel) அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில், விண்ணப்பக் கட்டணம், மின் இணைப்பு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்க மின் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் வீடுகளுக்கு மின் கட்டண செலவைக் குறைக்கும் வகையில், மத்திய அரசின் பிரதமர் சூரிய வீடு இலவச மின் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சோலார் பேனல் அமைக்க கட்டண விலக்கு வழங்க முடிவு

இந்த திட்டத்தின் கீழ் சோலார் பேனல்கள் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரித்து, வீடுகளின் மின் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்றும் இதனால் மின் கட்டணம் செலுத்த வேண்டிய தேவை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தமிழகம அரசும் கையிலெடுத்துள்ளது. அதன் படி 3 கிலோ வாட் சூரிய மின்சக்தி அமைக்க ரூ. 1 லட்சம் வரை மானியம் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் – உச்சநீதிமன்றம் இடைக்கால அனுமதி

இதனுடன் சேர்த்து, தமிழக அரசும் கூடுதல் மானியம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதன்படி, வருகிற 2027 மார்ச் மாதத்திற்குள் ஒரு லட்சம் வீடுகளில் இ சோலார் பேனல்கள் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதனையடுத்து 3 கிலோவாட் சூரியசக்தி மின் நிலையம் அமைத்தால் ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கி வருகிறது.

இந்நிலையில், இந்த திட்டத்தில் அதிக அளவில் பயனர்களை இணைக்கும் வகையில் விண்ணப்பக் கட்டணம், இருவழி மீட்டர் செலவு, மின் இணைப்புக் கட்டணம் ஆகியவற்றில் விலக்கு அளிக்க மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. மேலும், ஒருமுனை மின் இணைப்பை மும்முனையாக மாற்றுவதற்கும், மின் தேவையை 10 கிலோவாட் வரை உயர்த்துவதற்குமான கட்டணங்களிலும் விலக்கு அளிக்கப்பட உள்ளது. ஆணையத்தின் அனுமதி கிடைத்ததும் இந்தச் சலுகைகள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேனலின் கிலோவாட்டுக்கு ஏற்ப மானியத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மானியத்துடன் மாநில அரசின் பங்கும் சேர்த்து வழங்கப்படுகிறது.

  • அதன் படி 1 கிலோவாட் சோலார் பேனலுக்கு மத்திய அரசு ரூ.30,000 மற்றும் மாநில அரசின் ரூ.5,000 சேர்த்து ரூ.35,000 வழங்கப்படும்.
  • அதே போல 2 கிலோவாட் பேனலுக்கு மத்திய அரசு ரூ.60,000 மற்றும் மாநில அரசு ரூ.10,000 சேர்த்து ரூ.70,000 வழங்கப்படும்.
  • மேலும், 3 கிலோவாட் மற்றும் அதற்கு மேல் அமைக்கப்படும் சோலார் பேனலுக்கு மத்திய அரசு ரூ.78,000 மற்றும் மாநில அரசு ரூ.22,000 சேர்த்து அதிகபட்சம் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இதையும் படிக்க : “காலியாக உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜனவரியில் இடைத்தேர்தல்?”.. பொங்கலுக்குப் பிறகு வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு!

விண்ணப்பிப்பது எப்படி?

இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க வீட்டுக்கு பட்டா கட்டாயமில்லை என்றும் மின் இணைப்பு சர்வீஸ் எண் மற்றும் மின் அட்டை, ஆதார் கார்டு, வங்கிக் கணக்கு பத்தகம் ஆகியவற்றுடன் https://www.tnebltd.gov.in/usrp என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்ட பின், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் பேனல் அமைக்கப்பட்டு, அரசு மானியம் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us