AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Weather forecast: நவம்பர் 23, 24 தேதிகளில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை – எங்கெல்லாம் தெரியுமா?

Tamil Nadu Weather Alert: அக்வான் புயல் நவம்பர் 20, 2026 இன்று காலை கரையைக் கடந்த நிலையில் இது அடுத்த 6 மணி நேரத்தில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நவம்பர் 23, 24 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Weather forecast: நவம்பர் 23, 24 தேதிகளில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை – எங்கெல்லாம் தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 20 Nov 2026 15:04 PM IST

சென்னை, நவம்பர் 20 : வங்கக்கடல் பகுதியில் நிலவிய அக்வான் புயல் மேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 20, 2026 இன்று காலை 8.30 மணியளவில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர பிரதேச கடலோர பகுதியில் கோபால்பூருக்கு அருகே கரையைக் கடந்தது. இது அடுத்த 6 மணி நேரத்தில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வருகிற நவம்பர் 23, 2026 மற்றும் நவம்பர் 24, 2026 அன்று கனமழைக்கு (Heavy Rain Alert) வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

நவம்பர் 23, 24 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், நவம்பர் 20, 2026 இன்றும் நவம்பர் 21, 2026 நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க : சென்னையில் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை.. போதை ஊசிகள், மாத்திரைகள் பறிமுதல்; 5-க்கும் மேற்பட்டோர் கைது!!

அதனைத் தொடர்ந்து நவம்பர் 22, 2026 ஞாயிற்றுக்கிழமை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடலோர தமிழகத்தை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் இதர தெற்கு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

மேலும் நவம்பர் 23, 2026 அன்று கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதர பகுதிகளான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் டிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

இதையும் படிக்க : “Guidance நிறுவனத்துக்கே Guidance இல்லை என்ற நிலை!” – 15 அதிகாரிகள் பணிநீக்கம் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

வருகிற நவம்பர் 24, 2026 அன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow Us