AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை – அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என மு.க.ஸ்டாலின் கண்டனம்

இந்தச் சோதனை தொடர்பாக திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மத்திய அரசின் அமைப்புகளால் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் பிடிபடும் சூழலில், அதிலிருந்து மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்புவதற்காகவே முன்னாள் அமைச்சர் மூர்த்தியைக் குறிவைத்து சோதனை நடத்தப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை – அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என மு.க.ஸ்டாலின் கண்டனம்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 20 Nov 2026 12:28 PM IST

நவம்பர் 20, 2026: மதுரையில் திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வரும் நிலையில், இந்த நடவடிக்கைக்கு திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் காரணங்களுக்காக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள் தொடரப்படுவதாகவும், இதனை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

செம்மண், கல் குவாரி முறைகேடு வழக்கில் சோதனை

திமுக ஆட்சிக் காலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் மதுரையைச் சேர்ந்த மூர்த்தி. மதுரை மாவட்டம் பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் விதிமுறைகளை மீறி செம்மண் மற்றும் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, மதுரை ஐயர் பங்களா பகுதியில் உள்ள ரோஜா வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

“மக்களைத் திசைதிருப்பவே சோதனை” – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு


இந்தச் சோதனை தொடர்பாக திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மத்திய அரசின் அமைப்புகளால் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் பிடிபடும் சூழலில், அதிலிருந்து மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்புவதற்காகவே முன்னாள் அமைச்சர் மூர்த்தியைக் குறிவைத்து சோதனை நடத்தப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க: நகர்ப்புற அடிப்படை வசதிகளுக்கு ரூ.254 கோடி ஒதுக்கீடு.. 874 திட்டங்களுக்கு தமிழக அரசு ஒப்புதல்!

மேலும், தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கட்சியினரின் குற்றச்செயல்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒழுங்கீனம் குறித்த விமர்சனங்கள் எழும்போதெல்லாம் திமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

“நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொள்வோம்!

அரசியல் காரணங்களுக்காகத் தவெக அரசு திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்குகளைத் தொடர்வதாகக் குற்றம்சாட்டிய மு.க.ஸ்டாலின், இந்த நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொள்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: நகர்ப்புற அடிப்படை வசதிகளுக்கு ரூ.254 கோடி ஒதுக்கீடு.. 874 திட்டங்களுக்கு தமிழக அரசு ஒப்புதல்!

மேலும், ஆறு மாத ஆட்சியில் குறிப்பிடத்தக்க சாதனைகள் எதையும் செய்யாமல் மக்களின் அவநம்பிக்கையை மட்டுமே சம்பாதித்துள்ளதாக முதலமைச்சர் விஜய்யை விமர்சித்துள்ளார். தொடர்ந்து திமுகவைப் பற்றியே பேசுவதன் மூலம் மக்களை ஏமாற்ற முடியாது என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.  இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் நடைபெறும் சோதனை நிறைவடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணையில் தெரியவரும் விவரங்கள் குறித்து முழுமையான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us