Samantha: இதில் பல நாள் கண்ட சுகமே.. ஆண் குழந்தைக்கு தாயான நடிகை சமந்தா – பெயர் என்ன தெரியுமா?
Samantha Welcomes Baby Boy: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகிகளில் ஒருவராக இருந்துவருபவர் சமந்தா ரூத் பிரபு. இவர் ராஜ் நிதிமோருவை கடந்த 2025ம் ஆனது இறுதியில் திருமணம் செய்துகொண்டார். மேலும் கடந்த 2026 மே மாதத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்த நிலையில், நேற்று (19/11/2026) ஆண் குழந்தை பிறந்துள்ளதாக சமந்தா அறிவித்துள்ளார்.
கோலிவுட் சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக கொண்டாடப்பட்டுவரும் நாயகியாக இருந்துவருபவர் சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu). இவர் சில ஆண்டுகளாக தமிழில் எந்த படங்களிலும் பணியாற்றவில்லை. இறுதியாக இவரின் நடிப்பில் மா இன்டி பங்காரம் (Maa Inti Bangaaram Movie) என்ற தெலுங்கு படமானது வெளியானது. இப்படம் தமிழில் எங்கள் தங்கம் எந்த டைட்டிலில் வெளியானது. இந்த படம் 2026 மே மாதத்தில் வெளியான நிலையில், சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சிறப்பான வெற்றிப்படமாக அமைந்தது. நடிகை சமந்தா கடந்த 2025ம் ஆண்டு, தயாரிப்பாளரும், இயக்குநருமான ராஜ் நிதிமோரு (Raj Nidimoru) என்பவரை சிம்பிளாக திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு இவர்கள் இருவருமே ஒன்றாக ஜோடியாக பல இடங்களில் வலம்வந்தனர்.
மா இன்டி பங்காராம் படத்தின் வெற்றி விழாவில், சமந்தா கர்ப்பமாக இருப்பதாய் ரசிகர்கள் கண்டுபிடித்த நிலையில், பின் அவரும் ஒரு நிகழ்ச்சியில் தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்திருந்தார். அந்த விதத்தில் நடிகை சமந்தா மற்றும் ராஜ் நிதிமோரு தம்பதிக்கு நேற்று (19/11/2026) ஆண் குழந்தை (Boy baby) பிறந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகை சமந்தா பகிர்ந்துள்ளார்.




குழந்தை பிறந்தது குறித்து நடிகை சமந்தா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் அறிவிப்பு பதிவு:
View this post on Instagram
சமந்தா மற்றும் ராஜ் நிதிமோருவின் ஆண் குழந்தை பெயர்:
நடிகை சமந்தா பிறப்பால் கிறிஸ்தவராக இருந்தாலும், அவர் இந்து மதத்தையும் பின்பற்றிவருகிறார். ராஜ் நிதிமோருவுடனான தனது 2வது திருமணத்தை கோவையில் உள்ள ஈஷா மையத்தில் நடத்தியிருந்தார். மேலும் இவர் கர்ப்பமாக இருப்பதாக கடந்த 2026ம் ஆண்டு மே மாதத்தில் அறிவித்திருந்த நிலையில், அதன் பிறகு தனது 5வது மாதத்தின் வளைகாப்பை ஈஷா மையத்தில் வைத்து நடத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கும் நிலையில், “தேவ் நிதிமோரு” என பெயர் வைத்துள்ளார்களாம். இதை நடிகை சமந்தா ரூத் பிரபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: தனுஷின் ஓ.எம் படம் எப்படி இருக்கு சார்? ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்ஷன்!
இந்த பதிவின் கீழ் அவரின் ரசிகர்கள் மற்றும் பல்வேறு திரைப் பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்துவருகிறார்கள். மேலும் சமந்தாவுக்கு நேற்று (19/11/2026) குழந்தை பிறந்திருந்த நிலையில், அவர் இன்று (20/11/2026) அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது குழந்தை பிறந்திருக்கும் நிலையில், கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கும் மேல் எந்த திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை ஷோவிலும் அவர் பங்குபெறமாட்டார் என கூறப்படுகிறது.