AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

50 ஆண்டு கால வரலாற்று நினைவு! ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு திருப்பதி வழங்கிய பட்டுவஸ்திர மரியாதை!

Tirupati Temple: வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நினைவுகூரும் வகையில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு வஸ்திர மரியாதை வழங்கப்பட்டது. பட்டுவஸ்திரங்கள், தாயாருக்கான பட்டுப்புடவை மற்றும் மங்களப் பொருட்கள் மேளதாளங்கள் முழங்க கோவில் யானை ஆண்டாள் மீது ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டன. பின்னர் நம்பெருமாளுக்கும் அரங்கநாயகி தாயாருக்கும் வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

50 ஆண்டு கால வரலாற்று நினைவு! ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு திருப்பதி வழங்கிய பட்டுவஸ்திர மரியாதை!
ஸ்ரீரங்கம்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 20 Nov 2026 14:01 PM IST

வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நினைவுகூரும் வகையில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு வஸ்திர மரியாதை (Namperumal of Srirangam) வழங்கப்பட்டது. கடந்த காலத்தில் கி.பி. 1320 முதல் 1370 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற இஸ்லாமியப் படையெடுப்பின்போது ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சூறையாடப்பட்டது. இதையடுத்து, நம்பெருமாள் திருப்பதி திருமலையில் சுமார் 50 ஆண்டுகள் எழுந்தருளியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் கைசிக ஏகாதசியன்று திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வஸ்திர மரியாதை வழங்கப்பட்டு வருகிறது.

Also Read: கார்த்திகை மாத ஜோதிட எச்சரிக்கை: கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை?

பட்டுவஸ்திரங்களுடன் வந்த திருப்பதி தேவஸ்தானம்

அதன்படி, இந்த ஆண்டு கைசிக ஏகாதசியை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி மற்றும் உற்சவர் நம்பெருமாளுக்கு பட்டுவஸ்திரங்களும், அரங்கநாயகி தாயாருக்கு பட்டுப்புடவையும் கொண்டுவரப்பட்டன. மேலும், மாலை மற்றும் மங்களப் பொருட்களும் இந்த மரியாதையில் இடம்பெற்றிருந்தன. திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் எம். ரவிச்சந்திரா ஐஏஎஸ் தலைமையிலான குழுவினர் இந்தப் பொருட்களை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் பிரகாஷ், தலைமை பட்டாச்சாரியார் சுந்தர் பட்டர் மற்றும் கோவில் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

யானை மீது வைத்து நடைபெற்ற ஊர்வலம்

முன்னதாக, நம்பெருமாளுக்காகக் கொண்டுவரப்பட்ட வஸ்திரங்கள் ரங்கவிலாசம் மண்டபத்தில் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டன. தொடர்ந்து, கோவில் யானை ஆண்டாள் மீது வஸ்திரங்கள் வைக்கப்பட்டு, மேளதாளங்கள் முழங்க கோவிலின் உள்பிரகாரங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் கைசிக ஏகாதசியன்று திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வஸ்திர மரியாதை வழங்கப்பட்டு வருகிறது.

பெருமாள், தாயாருக்கு வஸ்திரங்கள் அணிவிப்பு

ஊர்வலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கொண்டுவரப்பட்ட பட்டுவஸ்திரங்கள் நம்பெருமாளுக்கும், பட்டுப்புடவை அரங்கநாயகி தாயாருக்கும் அணிவிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் ஸ்ரீரங்கம் கோவில் அலுவலர்கள், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும், திருப்பதியில் இருந்து நம்பெருமாளுக்கு ஓராண்டின் 365 நாட்களுக்கும் தேவையான வஸ்திர மரியாதை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: கார்த்திகை மாத ஜோதிட எச்சரிக்கை: கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை?

பொறுப்புத்துறப்பு: இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வரலாற்றுச் செய்திகள் மற்றும் கோவில் நிர்வாகம் தொடர்பான தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன. ஆன்மிக நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டு மரபுகள் பக்தர்களின் தனிப்பட்ட நம்பிக்கையைப் பொறுத்தவை.

Follow Us